மைக்கேல் தோப்பிங்கு

மைக்கேல் தோப்பிங்கு (Michael Topping , மைக்கேல் டொப்பிங்(கு) )(1747–1796) மதராசில் (இப்பொழுதுள்ள சென்னையில்) செங்கோட்டையின் தலைமைக் கடல் அளவையராக இருந்தார். ஐரோப்பாவுக்கு வெளிய, இன்று மிகப்பழமையான ஒரு தொழிற் கல்லூரியாக அறியப்படும் கிண்டி பொறியியற் கல்லூரியை இவர் மே 17, 1794 -இல் நிலவளவைக்கான கல்லூரியாக நிறுவினார். அப்பொழுது இக்கல்லூரியில் எட்டு மாணவர்களே இருந்தனர். 1858 -இல், இது குடிசார் பொறியியல் கல்லூரியாகவும், பின்னர் 1861 -இல் பொறியியற்கல்லூரியாகவும் உருப்பெற்றது.

மைக்கேல் தோப்பிங்கு (Michael Topping)

தோப்பிங்கு, இந்தியாவின் முதல் முழுநேர தொழில்சார் நில அளவையாளராகப் பணிபுரிந்தார். இந்தியாவின் தென்கிழக்கே உள்ள தொண்டைமண்டலக் கரையோரக் கடல்பகுதிகளில் நில அளக்கைகள் மேற்கொண்டார். வில்லியம் பெற்றி (William Petrie) என்னும் வானவியலாளரை உந்தி அவருடைய கருவிகளைக் கல்லூரிக்கு நன்கொடையாகத் தரச்செய்தார். இதைக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் 1792 இல் ஒரு வானவியல் கூர்நோக்ககம் (observatory) அமைக்க உதவினார். தோப்பிங்கு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கும்பெனியின் வானவியலாளராக அமர்த்தப்பெற்றார். இவர் 1796 -இல் இயற்கை எய்தினார்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_தோப்பிங்கு&oldid=3306050" இலிருந்து மீள்விக்கப்பட்டது