மொரோக்கோவின் ஆறாம் முகம்மது

ஆறாம் முகம்மது (Mohammed VI, (அரபு மொழி: محمد السادس‎, பிறப்பு: ஆகத்து 21, 1963)[1] என்பவர் மொரோக்கோ நாட்டின் தற்போதைய மன்னர் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு சூலையில் மொரோக்கோ மன்னராகப் பதவியேற்றார்[2].

ஆறாம் முகம்மது
Mohammed VI
மொரோக்கோ மன்னர்
ஆட்சிக்காலம்23 சூலை 1999 – இன்று
(24 ஆண்டுகள், 219 நாட்கள்)
முன்னையவர்அசன் II
முடிக்குரியவர்இளைவரசர் மௌலாய் அசன்
பிறப்பு21 ஆகத்து 1963 (1963-08-21) (அகவை 60)
ரபாத், மொரோக்கோ
துணைவர்அரசி லல்லா சல்மா
குழந்தைகளின்
பெயர்கள்
இளவரசர் மௌலாய் அசன்
இளவரசி லல்லா கதீஜா
வம்சம்அலவைட் வம்சம்
தந்தைஅசன் II
தாய்லல்லா அம்மூ
மதம்இசுலாம்

முகம்மது சட்டத்துறையில் இளங்கலைப் பட்டத்தை மொரோக்கோவின் அக்தால் பல்கலைக்கழகத்தில் 1985 இல் பெற்றார். அதே ஆண்டு நவம்பர் 26 இல் மொரோக்கோ இராணுவத்தில் சேர்க்கப்பட்டு கேர்ணல் மேஜராகப் பதவியேற்றார். 1994 ஆம் ஆண்டு வரை இவர் இராணுவத்தில் பணியாற்றினார். 1993 இல் பிரான்சின் நைசு சோபியா ஆண்டிபாலிசு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "King Mohammed Ben Al-Hassan". Embassy of the Kingdom of Morocco. பார்க்கப்பட்ட நாள் 18 February 2010.
  2. "World: Africa Mohammed VI takes Moroccan throne". BBC News. 24 July 1999. http://news.bbc.co.uk/1/hi/world/africa/402712.stm. பார்த்த நாள்: 18 February 2010. 

வெளி இணைப்புகள் தொகு