மொழி அமிழ்தல்

மொழி அமிழ்தல் என்பது ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு வழிமுறை ஆகும். ஒரு மொழியை அது பயன்படும் சூழலில் கூடிய இலகுவாகக் கற்கலாம் என்ற அடிப்படையில் ஒரு மாணவரை அத்தகையை சூழலில் அமிழ்த்தல் மூலம் மொழியைக் கற்றுத் தருவதே இந்த முறையின் அணுகு முறை ஆகும்.

மொழி அமிழ்தலின் வடிவமைப்பு பல வகைப்பட்டது. இவற்றில் ஒரு வகை, இலக்கு மொழி ஊடாக அனைத்து பாடக் கல்வியினை மேற்கொள்ளல் ஆகும். இந்த முறையைக் கனடிய ஆங்கிலேயர்கள் பிரெஞ்சு மொழியைக் கற்க 1960களில் முதலில் பயன்படுத்தினர். இன்னுமொரு வகை, ஒரு மாணவர் மொழி புழங்கும் சூழலுக்குச் சென்று வாழ்ந்து மொழியைக் கற்றல் ஆகும். இந்த அணுகுமுறை மாணவர் பரிமாற்றத் திட்டங்களில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இம் முறை ஆங்கில மொழி கற்பதற்காக கிழக்காசிய நாட்டவர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மொழிக் கூடு மொழி அமிழ்தலின் ஒரு நீட்சியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழி_அமிழ்தல்&oldid=3407330" இலிருந்து மீள்விக்கப்பட்டது