மொழி ஆய்வகம்

மொழி ஆய்வகம் என்பது நவீன மொழி கற்பிப்பிற்கு உதவும் ஒரு கேள்வி அல்லது காட்சி-கேள்விக் கருவி ஆகும். இது பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்விக் கூடங்களில் காணப்படுகின்றன. முதல் மொழி ஆய்வகம் 1908 ஆம் ஆண்டில் கிரேனாபுல் பல்கலைக்கழகத்தில் இருந்திருக்கக்கூடும்.[1][2] 1950 ஆம் ஆண்டில் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை அவை நாடா அல்லது சட்டங்கள் வடிவிலான அமைப்பில் இருந்து பின்னர் ஒலிநாடா அமைப்பிற்கு மாறின. தற்போது தனிமேசைக்கணினியில் பல்லூடக வடிவில் நிறுவப்பட்டுள்ளன. உண்மையான மொழி ஆய்வகங்கள் தற்போது நடைமுறையில் இல்லை. கணினியில் இணைக்கப்பட்டுள்ள ஒலிச் சாவடிகளில் மாணவர்கள் கேட்பதைக் கவனிப்பது ஆசிரியரின் கடமையாகும்.

A side view of a language laboratory. There are four rows of computers and a control desk at the front of the room.
ஜப்பான் உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள நவீன மொழி ஆய்வகம்

அமைப்பும் கட்டமைப்பும் தொகு

 
நவீன மொழி ஆய்வகத்தின் கருவறைக்கருவி
 
தலையணித் தொகுதிகளுடன் அமைந்த மாணவர் பகுதி

மொழி ஆய்வகம் பின்வரும் அமைப்புகளைக் கொண்டுள்ளது.

  1. கருவறைக்கருவி (Console)
  2. முதன்மைநிலை நாடாக்கள் (Master Tapes)
  3. இரட்டைப் பகுதிகள் உள்ள நாடாக்கள் (Twin track tapes)
  4. ஒலிப்பதிவு நாடாக் கருவிகள் (Tape Recorders)
  5. தலையணித் தொகுதிகள் (Headsets)
  6. நுண்ணொலிக் கருவிகள் (Microphones)

மரபான மொழி ஆய்வக அமைப்பு பொதுவாக ஒரு கருவறைக்கருவியைக் கொண்டிருக்கிறது. இது மாணவர் சாவடிகளின் பல வரிசைகளில் இணைக்கப்படுகிறது. பொதுவாக மாணவர் பகுதி ஒலிப்பதிவு நாடாக்கருவி, நுண்ணொலிக்கருவியைக் கொண்ட ஒரு தலையணித்தொகுதியைக் கொண்டிருக்கிறது. ஆசிரியர் கருவறைக்கருவி வழியாக ஒவ்வொரு சாவடியையும் கண்காணிப்பு செய்கிறார். மேலும் ஆசிரியர், மாணவர் இடையே இருவழித் தகவல் தொடர்பு வழங்கவும் தேவையான கருவிகளையும் மொழிஆய்வகம் கொண்டிருக்கிறது.

செயல்பாடு தொகு

முதன்மை நிலை நாடா ஆசிரியரால் இயக்கப்படும். அந்த ஒலி பயிற்சியாளர்களுக்கு அமைந்த ஒலிப்பதிவு நாடாக்கருவியில் பதிவாகும். பயிற்சியாளர் அந்த ஒலியைக்கேட்டு பின்னர் திரும்ப ஒலிக்க வேண்டும். இந்த ஒலிப்பதிவை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பக் கேட்கலாம்.

சிக்கல்கள் தொகு

1970 மற்றும் 1980 ஆண்டுகளில் மொழி ஆய்வகங்கள் முறிவு காரணமாக தம் நற்பெயரை இழந்தன. சட்டங்கள் வடிவிலான நாடாவைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. நேரத்தை வீணடித்தல், தவறான பயன்பாடு மூலம் மொழி ஆய்வகம் தோல்வியடைந்ததற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஊடக மாற்றம் தொகு

1980 களில் மரபான மொழி ஆய்வகத்தின் அழிவு ஒலி-மொழி முறைக்கு ஆதரவாகவும், மாணவரின் தவறான பயன்பாடு, புறக்கணிப்பு காரணமாகவும் ஏற்பட்டது. பல பள்ளிகள் தங்கள் பழைய மொழி ஆய்வகங்களை கணினி அறைக்குள் மாற்றின. இருப்பினும், 1990 ஆண்டுகளின் பிற்பகுதியில் மலிவான பல்லூடகத் திறன் கொண்ட தனிமேசைக்கணினிகளின் வருகை மொழி ஆய்வகத்தின் மறு உருவாக்கம், மாற்றம் ஆகியவற்றுக்கு வழிவகுத்தது. 1990 ஆண்டுகளில் புதிய மின்னனு அடிப்படையிலான அமைப்புகள், இணையம், காட்சி வடிவங்களின் சில நிலைகளில் சிறந்த மேலாண்மை அடிப்படையில் நீட்டிக்கப்பட்ட செயல்பாட்டுக்கு வழிவகுத்தன.

கற்பித்தல் வகைகள் தொகு

  1. ஒலிபரப்பு வகை (Broadcast Procedure)
  2. நூலக வகை (Library Operation)
  3. தொலைபேசி வகை (Dial Access)
  4. இணைந்த முறை (Combination Type).[3]

சிறப்புகள் தொகு

  • மீளச்செய்தல் (Retracing)
  • பாடப்பகுதியைத் தேர்ந்தெடுத்தல் (Material Selection)
  • தனிவேகக் கற்றல் (Self paced Learning)
  • திருத்தம் பெறுதல் (Getting Evaluated).[4]

மொழி ஆய்வகப் பயிற்சிகள் தொகு

  • ஒலித்தல் பயிற்சிகள்
  • கேட்டல் பயிற்சிகள்
  • மொழிப் பயிற்சிகள்
  • கருத்துணரும் பயிற்சிகள்.[4]

நிறைகள் தொகு

  • மொழி ஆய்வகத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன.
  • அவை மாணவர்கள் கலந்துரையாடும் அமர்வைக் கொண்டிருக்கின்றன.
  • எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்தே பயிற்றுவிப்பாளர் கூறும் கருத்துக்களைக் கேட்கச் சமமான வாய்ப்பை வழங்குகிறது.
  • பேசுவதற்குத் தயங்கும் மாணவர்களையும் தயக்கம் இல்லாமல் பேச வைக்கிறது.
  • மொழி ஆய்வகங்கள் மாணவர்களை சுதந்திரமாகப் பேசுவதற்கும், தங்கள் நண்பர்களிடையே பேசும் போது கூச்சமின்றிப் பேசுவதற்கும் உதவுகின்றன.
  • காதொலிக்கருவிகளின் மூலம் சரியான உச்சரிப்பு கேட்கும் என்பதால், அதைக் கேட்டு செயல்படுவதன்மூலம் தொடர்பு கொள்ளும் திறன்களை வளர்க்கிறது.
  • ஆய்வகக் கற்றல் காரணமாக மாணவர்கள் பாடம் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வமும் உற்சாகமும் காண்பிப்பார்.
  • மாணவரின் முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணிக்கலாம்.
  • அதனால் ஆசிரியர் தனிப்பட்ட வேகம் மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கருத்துக்களை வழங்க முடியும்.
  • மாணவர் மைய அணுகுமுறையாக வகுப்பறைகளை அனுமதிப்பதன் மூலம் மாணவர்கள் தமது சொந்த வேகத்தில் பாடம் கற்றுக்கொள்ள முடியும்.[5]

குறைகள் தொகு

  • இம்மொழி ஆய்வகங்கள் மிகவும் விலை உயர்ந்தவை.
  • இந்தியா போன்ற சில நாடுகளில் இதற்கான பாடத்திட்டங்கள் இல்லை.
  • இது போன்ற மொழி ஆய்வகங்களில் பேரளவாக 60 மாணவர்களை மட்டுமே ஈடுபடுத்த முடியும்.
  • மாணவர்கள் உச்சரிப்பைக் கேட்பதற்கு போதுமான பொறுமையைக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் நடைமுறையில் பதிவு செய்வது மிகவும் கடினம்.
  • தொழில்நுட்பம் விரைவாக மாறுகிறது எனில், அதற்கான வழிமுறைகளின் மேம்பாட்டிற்கான ஒரு ஏற்பாடு இருக்க வேண்டும்.
  • இது நிதி அடிப்படையில் பள்ளிக்கான சுமையாக அமையும்.
  • கல்வி அமைச்சகம் மொழி ஆய்வகத்தை நிர்வகிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
  • இந்த அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றால் மட்டுமே நம் பாடத்திட்டத்தில் மொழி ஆய்வகத்தைச் செயல்படுத்துவது பற்றிச் சிந்திக்கலாம்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Léon, P.R. (1962). Laboratoire de langues et correction phonétique.. Paris: Didier. 
  2. Roby, W.B. (2004). "Technology in the service of foreign language teaching: The case of the language laboratory. In D. Jonassen (ed.), Handbook of Research on Educational Communications and Technology, 523-541, 2nd ed" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2010-01-30.
  3. {{தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், ஆசிரியர் கல்விப் பட்டயப் பயிற்சி, இரண்டாமாண்டு தமிழ்மொழி கற்பித்தல் வளநூல், ப.111}}
  4. 4.0 4.1 {{தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், ஆசிரியர் கல்விப் பட்டயப் பயிற்சி, இரண்டாமாண்டு தமிழ்மொழி கற்பித்தல் வளநூல், ப.112}}
  5. http://download.ascdirect-usa.com/lab%20benefits/benefits%20and%20advantages.aspx பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
  6. singh, S (2013). "Language Laboratory: Purposes and Shortcomings". journal of Technology for ELT 3. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழி_ஆய்வகம்&oldid=3871210" இலிருந்து மீள்விக்கப்பட்டது