மொழி வரலாறு

மொழி வரலாறு என்பது மனிதர் எப்போது மொழியைப் பயன்படுத்த தொடங்கினர் என்பது பற்றியும், குறிப்பிட்ட மொழிகள் எப்போது தோன்றி மருபின என்பது பற்றியதும் வரலாறு ஆகும்.

பேச்சு மொழியின் தோற்றம் தொகு

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அண்டம் தோன்றியதாகவும், தற்கால மனித இனம் (Homo Sapiens) 300, 000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகவும் அறிவியலாளர்கள் கருதுகின்றனர். சுமார் 100000-50000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து மனிதர் மத்திய ஆசியா ஊடாக ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்குப் பரவினர். சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு மொழி தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[1]

எழுத்து மொழியின் தோற்றம் தொகு

பெரும்பாலும் காட்டுவாசி ஆக இருந்த மனிதர், கிமு 10 000 ஆண்டுகள் அளவில் வேளாண்மையில் ஈடுபட தொடங்கினர். சுமேரிய (கிமு 5000) , எக்ப்திய (3500), இந்து (கிமு 2600), சீன (கிமு 2100), கிரேக்க (கிமு 1600) நாகிரகங்கள் வேளாண்மை சிறந்த ஆற்றுக்கரையை ஒட்டிப் பிறந்தன.

இந் நாகரிகங்களின் ஒரு முக்கிய கூறு அவை எழுத்து மொழியை பயன்படுத்த தொடங்கியது ஆகும்.

  • சுமேரிய மொழி - கிமு 3100-2000
  • எகிப்திய மொழி - கிமு 3400
  • கிரேக்க மொழி
  • சீன மொழி
  • பிராக்கிரதம்
  • தமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. The Knowledge Books. (2007). Washington: National Geographic.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழி_வரலாறு&oldid=1865748" இலிருந்து மீள்விக்கப்பட்டது