மோவாபிய மொழி

மோவாபிய மொழி அல்லது மோவாப் மொழி அழிவுற்ற எபிரேய கானானிய மொழியாகும். இது பெரும் மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த்த மொழியாகும். இது தற்போதைய யோர்தான் நாட்டின் வடமேற்கு பகுதிகளில் (அன்றைய மோவாப்) கிமு 1வது ஆயிரவாண்டின் முதல் பகுதியில் பேசப்பட்ட மொழியாகும். மோவாபிய மொழி பற்றிய ஆய்வுகள் மோவப் கல்வெட்டு மற்றும் எல்-கர்க் எழுத்துக்கள்[1] என்பவற்றை கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன. இவை இம்மொழியானது விவிலிய எபிரேய மொழியுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த்தை காட்டுகிறது. சில சிறிய வேறுபாடுகளை மட்டுமே ஆய்வாளகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

மோவாபிய மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2sem
ISO 639-3obm

குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.

ஆதாரங்கள் தொகு

  1. எல்-கர்க் எழுத்துக்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோவாபிய_மொழி&oldid=1881257" இலிருந்து மீள்விக்கப்பட்டது