ம. சிங்காரவேலர் மாளிகை

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு கட்டிடம்

ம. சிங்காரவேலர் மாளிகை (ஆங்கில மொழி: M. Singaravelar Maligai) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்திலுள்ள சில அரசு அலுவலகங்கள் மற்றும் பொது மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் கொண்ட ஓர் அலுவலக வளாகமாகும்.[1][2][3] பொதுவுடைமைக் கொள்கை கொண்டவரும், சமூக சீர்திருத்தவாதியுமான மலையபுரம் சிங்காரவேலு என்ற ம. சிங்காரவேலர் நினைவாக இக்கட்டிடம் பெயரிடப்பட்டது.[4] கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ம. சிங்காரவேலர் மாளிகையின் புவியியல் ஆள்கூறுகள், 13°05′45″N 80°17′33″E / 13.095900°N 80.292400°E / 13.095900; 80.292400 ஆகும்.

ம. சிங்காரவேலர் மாளிகை
ம. சிங்காரவேலர்
Map
பொதுவான தகவல்கள்
வகைஅரசு அலுவலகங்கள் மற்றும் பொது மற்றும் அமர்வு நீதிமன்றங்கள்
இடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முகவரிஇராசாசி சாலை, ஜார்ஜ் டவுன், சென்னை, தமிழ்நாடு - 600001, இந்தியா
ஆள்கூற்று13°05′45″N 80°17′33″E / 13.095900°N 80.292400°E / 13.095900; 80.292400
உரிமையாளர்தமிழ்நாடு அரசு
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை8
உயர்த்திகள்4

கட்டிடம் எட்டு தளங்கள் மற்றும் முன் பக்கத்தில் நிலத்தடி காப்பக அறைகள் மற்றும் வளாகத்தின் பின்புறத்தில் ஒரு தரை தள கட்டிடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நான்காவது மாடியில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது.[5] மற்றும் பொதுவாக, கட்டிடமே மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் என்று அழைக்கப்படுகிறது.[6] தேசிய தகவல் மைய அலுவலகம் மாவட்ட நிர்வாக அலுவலகத்துடன் இங்கு அமைந்துள்ளது.[7] ஆதார் நிரந்தர பதிவு மையம் மற்றும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான அலுவலகம் ஆகியவை, பின்புறம் தரைத்தள கட்டிடத்தில் அமைந்துள்ளன.[8]

முதல் தளத்தில் பொது மற்றும் கூடுதல் அமர்வு நீதிமன்றங்கள் உள்ளன. இரண்டாவது தளத்தில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், தாட்கோ மற்றும் சிவில் நீதிமன்றம் ஆகியவை உள்ளன. சம்பளக் கணக்கு அலுவலகம் (வடக்கு) மூன்றாவது மாடியில் உள்ளது. நான்காவது தளத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தவிர, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் மற்றும் ஒரு சிறிய கூட்ட அரங்கம் உள்ளது. ஐந்தாவது மாடியில் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், முத்திரை அலுவலகம், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட தகவல் மைய அலுவலர் அலுவலகம் ஆகியவை அமையப் பெற்றுள்ளன. ஆறாவது மாடியில் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகம் மற்றும் பழங்குடியின நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கும் அலுவலகம் உள்ளன. ஏழாவது மாடியில் சார்நிலைக் கருவூலம் (கோட்டை, தண்டையார்பேட்டை) உள்ளது. மற்றும் எட்டாவது மாடியில் முத்திரைத்தாள்களுக்கான மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஒரு கூட்ட அரங்கம் உள்ளது.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட பொதுமக்களை சென்னை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள் தனியாக உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. Rina Kamath (2000). Chennai (in ஆங்கிலம்). Orient Blackswan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-1378-5.
  2. வைதேகி பாலாஜி / Vaidegi Balaji (2016-05-01). பெண்களுக்கான சட்டங்கள் / Pengalukkana Sattangal (in ஆங்கிலம்). Kizhakku Pathippagam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84149-90-1.
  3. கிளிமூக்கு அரக்கன். கிளிப்பேச்சு. Free Tamil Ebooks.
  4. "Malayapuram Singaravelu" (in ஆங்கிலம்). 2022-11-19. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  5. "detail_contact". www.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  6. "Contact Us" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  7. "District Centres" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  8. "Aadhar Enrolment Center in Tamil Nadu - Page 5 -". aadharcenter.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._சிங்காரவேலர்_மாளிகை&oldid=3847240" இலிருந்து மீள்விக்கப்பட்டது