ம. சிவசுப்பிரமணியன்

முகில் என்கிற பெயரில் எழுதும் ம. சிவசுப்பிரமணியன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். மே 28, 1980ல் கோயமுத்தூரில் பிறந்த முகிலின் சொந்த ஊர் தூத்துக்குடி.

கணிப்பொறித் துறையில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு, விகடன் மாணவர் நிருபராகவும், கல்கியில் பகுதி நேர நிருபராகவும் பணியாற்றினார். தற்போது நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் தமிழ் பிரிவில் முதன்மை துணை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

கல்கி, தினமணி கதிர், குங்குமம், ரிப்போர்ட்டர் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதும் முகில், நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவர். தினமணி கதிரில் இரண்டு வருடங்களாக வெளிவந்த இவரது 'லொள்ளு தர்பார்' 'லொள் காப்பியம்' பத்திகள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.

குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ‘அகம் புறம் அந்தப்புரம்' என்றொரு வரலாற்றுத் தொடரை எழுதிக் கொண்டிருக்கிறார். இது இந்திய சமசுதானங்களை ஆண்ட மகாராசாக்கள் பற்றிய தொடர் கடந்த ஓராண்டுக்கும் மேல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இவரது நூல்கள் தொகு

  1. துப்பாக்கி மொழி (இந்தியத் தீவிரவாத இயக்கங்கள் குறித்த ஆய்வு)
  2. கண்ணீரும் புன்னகையும் (நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை)
  3. லொள்ளு தர்பார் (நகைச்சுவைக் கட்டுரைகள்)
  4. லொள் காப்பியம் (நகைச்சுவைக் கட்டுரைகள்)
  5. ஸ்...! (அண்டார்டிகா: பயணம் - வரலாறு - வாழ்க்கை)
  6. மும்பை: குற்றத் தலைநகரம்
  7. யூதர்கள் : வரலாறும் வாழ்க்கையும்
  8. அக்பர்
  9. ஔரங்கசீப்
  10. எம்.ஆர்.ராதாயணம் (நடிகர் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை)

வெளிவரவிருக்கும் நூல்கள் தொகு

  1. மெகல்லன்
  2. செங்கிஸ்கான் (மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான் பற்றிய முதல் தமிழ் நூல்)

கவிதைகள் தொகு

  1. ஆ.. (கவிதைகள்)
  2. ம்.. (கவிதைகள்)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._சிவசுப்பிரமணியன்&oldid=3223225" இலிருந்து மீள்விக்கப்பட்டது