யாவல் வனவிலங்கு சரணாலயம்

யாவல் வனவிலங்கு சரணாலயம் (Yawal Wildlife Sanctuary) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் ஜள்காவ் மாவட்டம்|யள்காவ் மாவட்டத்திலுள்ள]] யாவல் தாலுக்காவில் அமைந்துள்ளது {{coords|21.382|75.876|region:IN-MH|notes=[2]. அடர்த்தியான கானகப் பகுதியுடன் 178 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் யாவல் வனவிலங்கு சரணாலயம் பரவிக் காணப்படுகிறது. பல்வேறு வகையான விலங்குகளும், பசுந்தாவரங்களும் நிறைந்து ஓர் அழகான பொழுதுபோக்கிடமாக இச்சரணாலயம் திகழ்கிறது.

யாவல் வனவிலங்கு சரணாலயம்
Yawal Wildlife Sanctuary
அமைவிடம்ஜள்காவ் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
அருகாமை நகரம்பர்கன்பூர், மகாராட்டிரம், இந்தியா
ஆள்கூறுகள்21°22′55″N 75°52′34″E / 21.382°N 75.876°E / 21.382; 75.876[1]
பரப்பளவு178 km2 (69 sq mi)

தாவரங்கள் மற்றும் விலங்குகள் தொகு

தாவரங்கள் தொகு

தேக்கு, சலாய்,அஞ்சன் மரங்கள் இங்குள்ள காட்டில் நிறைந்துள்ளன. நாவம் மரங்கள், சீசா மரங்கள் போன்ற மற்ற முக்கிய இனங்களும் மூங்கில் மற்றும் புற்கள் உள்ளிட்ட பலவகை மரங்கள் நிறைந்த ஒரு சரணாலயமாக யாவல் சரணாலயம் இருக்கிறது.

விலங்குகள் தொகு

புலி, சிறுத்தை,கடமான், இந்தியச் சிறுமான், நீலான், தேன் கரடி, கழுதைப் புலி, குள்ளநரி, நரி, ஓநாய், காட்டுப் பன்றி, காட்டுப் பூனை, குரைக்கும் மான், பறக்கும் அணில் போன்ற பலவகையான விலங்குகளும் அனைத்து வகையான பறவைகளும் சரணாலயத்தில் நிறைந்துள்ளன.

காலநிலையும் தங்குமிடமும் தொகு

எப்பொழுதும் குளிச்சியான சூழல் நிலவும் சரணாலயமாக உள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான தங்கும் விடுதிகள் உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அளிக்கின்றன.

போக்குவரத்து வசதி தொகு

யாவல் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து 123 கிலோமீட்டர் தொலைவில் யள்காவ் விமான நிலையம் மற்றும் இராவெர் இரயில் நிலையம் ஆகியன அமைந்துள்ளன

மேற்கோள்கள் தொகு

  1. "Yawal Sanctuary". protectedplanet.net.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Yawal Sanctuary". protectedplanet.net.[தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள் தொகு