யு. ராமா ராவ்

யு. ராமா ராவ் (U. Rama Rao or U. Rama Rau, இ. மே 12, 1952) சென்னை மாகாணத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த இவர் தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத்தலைவராகப் பணியாற்றியுள்ளார்

ராமா ராவ் ஒரு மருத்துவர். டாக்டர் டி. எம். நாயருடன் இணைந்து ஆண்டிசெக்ப்டிக் என்ற மருத்துவ ஆய்விதழை நடத்தியவர். இந்திய மருத்துவ சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான இவர் பின்னாளில் அதன் தலைவராகவும் பணியாற்றினார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகப் பணியாற்றி பின் 1927 இல் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானார். 1935 இல் சென்னை சங்கீத அகாதமியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய இவர் பின் அதன் தலைவராகப் பணியாற்றினார். பிரித்தானிய இந்தியாவின் நடுவண் நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1937-45 காலகட்டத்தில் சென்னை மாகாண நாடாளுமன்ற மேலவைத் தலைவராகப் பதவி வகித்தார்.[1][2][3][4]

இவரது மகன் கிருஷ்ண ராவும் ஒரு மருத்துவர் மற்றும் அரசியல்வாதி; கொள்ளுப் பேரன் அரவிந்த் அடிகா ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர்.

மேற்கோள்கள் தொகு

  1. Historic moments, historic personalities
  2. "A lineage of success". Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் 2011-11-14.
  3. British Medical Journal, Medicine in India, May 22, 1954
  4. "Tamil Nadu Legislative Assembly, I assembly resume" (PDF). Archived from the original (PDF) on 2011-09-04. பார்க்கப்பட்ட நாள் 2011-11-14.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யு._ராமா_ராவ்&oldid=3569284" இலிருந்து மீள்விக்கப்பட்டது