யொகானி

இலங்கைப் பாடகர்

யொகானி திலோக்கா த சில்வா (Yohani Diloka de Silva , சிங்களம்: යොහානි දිලෝකා ද සිල්වා, பிறப்பு: 30 சூலை 1993), பொதுவாக யொகானி என அறியப்படுபவர் ஒரு இலங்கைப் பாடகியும் பாடலாசிரியரும் இசை வழங்குநரும் ஆவார். யூடியூப்பில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் ‘தெவியங்கே பாரே’ எனும் பாடலின் மூலம் நன்கறியப்படத் தொடங்கினார். பின்னர் மேலும் பாடல்களை வெளியிட்ட அவர் இலங்கையின் சொல்லிசை இளவரசி எனக் கூறுமளவுக்குப் புகழ் பெற்றார்.[1] அவரது "மெனிக்கே மகே ஹித்தே" என்ற பாடலின் மூலம் பல நாடுகளிலும் பிரபலமானார்.[2] யூடியூப்பில் இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட சந்தாதாரர்களைப் பெற்ற இலங்கையின் முதலாவது பாடகியும் அவரே.[3]

யொகானி
தாய்மொழியில் பெயர்යොහානි
பிறப்புயொகானி திலோக்கா த சில்வா
30 சூலை 1993 (1993-07-30) (அகவை 30)
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கையர்
கல்விவிசாக்கா வித்தியாலயம்
படித்த கல்வி நிறுவனங்கள்சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகம்
பணி
  • பாடகி
  • பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2016–தற்போது

சர்ச்சை தொகு

யொகானியின் இலங்கை இராணுவ தொடர்பு சர்ச்சைக்குள்ளானது. யொகானியின் தந்தை முன்னாள் இலங்கை இராணுவம் மேஜர் ஜெனரல் பிரசன்னா டி சில்வாவின் ஆவார். அவர் மீது போர்க் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டது. அப்படியிருக்கையில் யொகானி அவரை ஒரு 'ஹீரோ' என்று புகழ்ந்துள்ளார்.[4] மேலும் அவர் இராணுவ பல்கலைக்கழகம் ஒன்றில் படித்தார். மேலும், அவர் தமிழ் சினிமாவில் நுழைவதற்கு எதிர்வினைகள் ஏற்பட்டன. அது ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கி மீது விமர்சனத்தை கொண்டு வந்தது.[5][6]

உசாத்துணைகள் தொகு

  1. "යොහානි ද සිල්වා, Yohani De Silva Wiki, Height, Age, Boyfriend, Family, Biography & More - Sprojo" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-08-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.
  2. Weerasooriya, Sahan. "Global recognition for local artiste!" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
  3. "'Manike Mage Hithe' Yohani's Manike touches the hearts of 60 million". Print Edition - The Sunday Times, Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.
  4. "White vans and war crimes - Yohani's Sri Lankan military connection". Tamil Guardian.
  5. "Harris Jayaraj deletes Yohani tweet after Tamil genocide backlash! Tamil Movie, Music Reviews and News".
  6. "யோஹானியை தமிழில் பாட வைப்பதா? ஹாரிஸ் ஜெயராஜ் - மதன் கார்க்கி மீது முறைப்பாடு".
"https://ta.wikipedia.org/w/index.php?title=யொகானி&oldid=3712722" இலிருந்து மீள்விக்கப்பட்டது