இயற்கை மீள்மம்

(ரப்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இயற்கை மீள்மம் (இயற்கை ரப்பர் அல்லது இயற்கை இறப்பர், Natural Rubber ) என்பது சில வகை மரங்களில் இருந்து கிடக்க கூடிய பாலைப் போன்ற ஒரு மீள் திறன் கொண்ட ஒரு வகை திரவம் ஆகும் . அந்த மரங்களின் தண்டை கிழித்தால் வடிகின்ற பால் போன்ற வெள்ளை திரவமே மீள்மம் ஆகும்.

இயற்கை மீள்மத்தின் வடிப்பு முறை

இறப்பர் மிகவும் மீள்தன்மையுடையதும், நீர் ஊடுபுகவிடுதிறன் மிகக் குறைந்ததுமாகும். எனவே இது சிறப்பான பொருட்களை உருவாக்கப் பயன்படுகிறது. இறப்பர் முதன்முதலில் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் தமது குடியேற்ற நாடுகளில் வர்த்தகப் பயிராகப் பயிரிடப்பட்டது. இன்று உலகில் 94%மான இயற்கை இறப்பர் ஆசியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இறப்பரை பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றன.[1][2][3]

இயற்கை இறப்பர் ஐசோபிரீனின் பல்பகுதியமாகும்(cis-1,4-polyisoprene). இது மீள்தன்மையானதும் வெப்பமிளக்கியுமாகும். இதனுடன் கந்தகத்தை சேர்த்து வல்கனைசுப் படுத்துவதன் மூலம் பயன்படுத்தக்கூடிய இறப்பர் உருவாக்கப்படுகிறது.

பயிரீடு

தொகு

இரப்பர்ப்பால் இறப்பர் மரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. தோட்டங்களிலுள்ள இறப்பர் மரங்களின் ஆயுட்காலம் 32 ஆண்டுகளாகும்.

இறப்பரின் சிறப்பான வளர்ச்சிக்கு பின்வரும் காலநிலை நிலைமைகள் காணப்படவேண்டும்.

  • 250செ.மீ. மழைவீழ்ச்சி
  • வெப்பநிலை வீச்சு 200C-340C
  • 80% வளிமண்டல ஈரப்பதன்
  • நல்ல சூரியஓளி
  • கடும் காற்று வீசாத பகுதி

பால் சேகரிப்பு

தொகு

தென்னைகள் அதிகமுள்ள கேரளா போன்ற பகுதிகளில் தேங்காய்ச் சிரட்டைகள் பால் சேகரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும் அலுமினியம், களி, பிளாஸ்ரிக் போன்றவற்றாலான கோப்பைகளும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rubber
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1.   Dunstan, Wyndham Rowland (1911). "Rubber". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 23. Cambridge University Press. 
  2. Sirimaporn Leepromrath, et al. "Rubber crop diversity and its influential factors in Thailand." Journal of Rubber Research 24.3 (2021): 461-473.
  3. Muhammad Fadzli Ali, et al., "The dynamics of rubber production in Malaysia: Potential impacts, challenges and proposed interventions." Forest Policy and Economics 127 (2021): 102449.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_மீள்மம்&oldid=3768943" இலிருந்து மீள்விக்கப்பட்டது