ராஜா ராவ்

சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர்

ராஜா ராவ் (நவம்பர் 8, 1908-ஜூலை 8, 2006) ஆங்கிலத்தில் புதினம் (இலக்கியம்) மற்றும் சிறுகதைகள் எழுதிய இந்திய எழுத்தாளர், பேராசிரியர் ஆவார். இவரின் படைப்புகள் மீவியற்பியல் தாக்கத்தை அதிகம் கொண்டிருக்கும். 1960 இல் இவரின் பாம்பும் கயிறும் என்ற பெயரில் எழுதிய சுயசரித புதினமானது ஐரோப்பா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருக்கும் ஆன்மீக நம்பிக்கை பற்றியக் கருத்துகளைக் குறித்து இருந்தது.[1] 1988 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான சர்வதேச நியஸ்தாத் விருது பெற்றார். தனது பல்வேறு எழுத்துப் படைப்புகளின் மூலம் இந்திய இலக்கியத்திற்குமட்டுமல்லாது உலக இலக்கியத்திலும் பங்காற்றியுள்ளார்.[2] 1969 இல் சாகித்திய அகாதமி விருது பெற்றார்.

ராஜா ராவ்
பிறப்பு(1908-11-08)8 நவம்பர் 1908
ஹாசன்
இறப்பு8 சூலை 2006(2006-07-08) (அகவை 97)
ஆஸ்தின் தெக்சாஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தொழில்எழுத்தாளர், பேராசிரியர்
மொழிஆங்கிலம், பிரஞ்சு, கன்னடம்
கல்வி நிலையம்உஸ்மானிய பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மான்ட்பெல்லர் பல்கலைக்கழகம்
காலம்1938–1998
வகைசிறுகதை, புதினம்,
குறிப்பிடத்தக்க படைப்புகள்கந்தபுரா (1938)
பாம்பும் கயிறும் (1960)
குறிப்பிடத்தக்க விருதுகள்
  • சாகித்ய அகாதமி விருதுகள் (1969)
  • பத்ம விபூசன்(2007)
இணையதளம்
www.therajaraoendowment.org

வாழ்க்கை வரலாறு தொகு

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ராஜா ராவ் அவர்கள் நவம்பர் 8, 1908 இல் ஹாசன், கர்நாடகாவில் பிறந்தார். இவர் ஸ்மார்த்தம் பிராமணர் வகுப்பைச் சார்ந்தவர் ஆவார்.இவருடைய பெற்றோருக்கு 9 குழந்தைகள். இவர்களில் ராஜா ராவ் தான் மூத்தவர். இவருக்கு ஏழு சகோதரிகளும் யோகேஷ்வர ஆனந்தா எனும் சகோதரனும் உள்ளனர். இவருடைய தந்தை பெயர் எச். வி. கிருஷ்ணசுவாமி கர்நாடகாவின் தாய்மொழியான கன்னட மொழியை ஐதராபாத்து (இந்தியா) நிசாம் கல்லூரியில் கற்பித்தார். இவருடைய தாயார் கௌரம்மா , ராஜா ராவுக்கு நான்கு வயதாக இருக்கும் போது இறந்தார்.[3]

நான்கு வயதாக இருக்கும் போது இவருடைய தாயார் இறந்ததால் அவருடைய தாயின் பாதிப்பு இவருடைய பெரும்பாலான படைப்புகளில் காணப்படுகிறது. ஒரு தாயும் ஆதரவற்றோர் இல்லமும் இவரது கதையில் இடம்பெறுகிறது. இவருடைய மற்றொரு தாக்கம் இவருடைய தாத்தா இவர் ஹாசனில் ராவுடன் இவருடன் இருந்தவர். இவர்கள் இருவரின் தாக்கமும் இவருடைய படைப்புகளில் நிறைந்திருக்கும்.

ராவ் ஐதராபாத்திலுள்ள மதராசா- இ- அலியா எனும் முஸ்லிம் பள்ளிக்கூடத்தில் பயின்றார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு 1927 ஆம் ஆண்டில் கல்லூரிப் படிப்பிற்காக நிசாம் கல்லூரியில் சேர்ந்தார்.உசுமானியா பல்கலைக்கழகத்தில் அகமது அலியின் நண்பரானார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் வரலாறு பிரிவுகளில் பட்டம் பெற்றதன் மூலம் 1929 ஆம் ஆண்டில் ஐதராபாத்து அரசின் வெளிநாடு சென்று கல்வி கற்பதற்கான ஆசிய கல்வி உதவித் தொகையைப் பெற்றார்.

ராவ் மேற்படிப்பிற்காகப் பிரான்சில் உள்ள மான்ட்பெல்லர் பல்கலைக்கழகம் சென்றார். பின்பு பாரிசில் உள்ள, சோர்போன் சென்று பிரெஞ்சு மொழி மற்றும் இலக்கியம் பயின்றார். 1931 இல் தனக்கு மான்ட்பெல்லரில் பிரஞ்சு மொழி கற்றுக் கொடுத்த கமில் மவுலை திருமணம் செய்தார். 1939 வரை தான் அந்தத் திருமண பந்தம் நீடித்தது. ராவ் தனது முதல் கதையை பிரெஞ்சு மொழி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டார். 1931-1932 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஜெயா கர்நாடகா என்ற புகழ்பெற்ற பத்திரிகையாளருக்காக நான்கு கட்டுரைகளை கன்னட மொழியில் எழுதினார்.

புதினங்கள் தொகு

கந்தபுரம் (1938). நாகமும் கயிறும் (1960). வில்லியம் சேக்சுபியரும் பூனையும் :இந்தியாவின் கதை (1965). தோழர் கிரில்லோவ் (1976) [4]. சதுரங்க வல்லுநரும் அவருடைய நகர்த்தல்களும் (1988)

விருதுகள் தொகு

1964 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றார். 1969 இல் இந்திய அரசின் மூன்றாவது மிக உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம பூசண் விருது பெற்றார்.[5] 1988 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான சர்வதேச நியஸ்தாத் விருது பெற்றார். 2007 இல் இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூசண் விருதினைப் பெற்றார்.

குறிப்புகள் தொகு

  1. "1964 சாகித்ய அகாதமி விருதுகள்".
  2. "டெக்சாஸ் பல்கழைக்கழகம் : ராஜா ராவ்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 17 சூன்2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. ஆல்டெர்னோ, லெடிசியா (17 சூலை 2006). "ராஜா ராவ்: இந்திய எழுத்தாளர்- ஆன்மீகம்". London: தி கார்டியன். https://www.theguardian.com/news/2006/jul/17/guardianobituaries.india. பார்த்த நாள்: 3 சூலை2017. 
  4. reserved, the complete review - all rights. "Comrade Kirillov - Raja Rao". www.complete-review.com.
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_ராவ்&oldid=3578161" இலிருந்து மீள்விக்கப்பட்டது