ராஜீவ் ரஞ்சன்

ராஜீவ் ரஞ்சன் (Rajeev Ranjan பிறப்பு:22 செப்டம்பர் 1961) இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். 1985-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2]

ராஜீவ் ரஞ்சன்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்
பதவியில்
31 ஜனவரி 2021 – 7 மே 2021
முன்னையவர்கே. சண்முகம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 22, 1961 (1961-09-22) (அகவை 62)
ஜார்கண்ட், இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விஇ. ஆ. ப
இணையத்தளம்தமிழ்நாடு தலைமை செயலகம்

கல்வி தொகு

இவர் அறிசார் சொத்துரிமை பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர். அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டமும், லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் மையத்தில் பொது கொள்கை பிரிவில் முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார்.இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத உள்ளிட்ட மொழிகளில் நல்ல புலமை மிக்கவர்.[3]

அரசுப் பணிகள் தொகு

1985 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். 1987 முதல் 1989 வரை திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆட்சியராக பதவியில் இருந்தார். திருச்சி மாவட்ட ஆட்சியராக ஏப்ரல் 1995 முதல் அகத்து 1997 வரை பதவியில் இருந்தார்.2001 முதல் 2007 வரை 7 ஆண்டுகள் அயல்பணியாக மத்திய அரசுப்பணியில் பணியாற்றினார். 2007-ல் இணைச் செயலாளர் அந்தஸ்த்துக்கு உயர்வு பெற்றார். 2009 முதல் முதன்மைச் செயலராக பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். மத்திய அரசின் அயல் பணியில் 11 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.சரக்கு சேவை வரி கவுன்சிலில் சிறப்பு செயலாளராக பணியாற்றியவர். கே. சண்முகத்தின் பணி ஓய்வுக்குப் பின்னர் தமிழகத்தின் 47-வது தலைமைச் செயலாளராக 31 ஜனவரி 2021 அன்று தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.2021 மே 7 அன்று தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக வெ. இறையன்பு நியமனத்தையொட்டி, தமிழ்நாடு செய்தித்தாள் கழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. புதிய தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்: ஆலோசகராக க.சண்முகம் நியமனம். தி இந்து தமிழ் நாளிதழ். 31 ஜனவரி 2021. https://www.hindutamil.in/news/tamilnadu/627832-rajiv-ranjan-appointed-new-chief-secretary-k-shanmugam-appointed-advisor.html. 
  2. Rajeev Ranjan named Tamil Nadu Chief Secretary. The Hindu. 31 Jan 2021. https://www.thehindu.com/news/national/tamil-nadu/rajeev-ranjan-named-tamil-nadu-chief-secretary/article33708115.ece. 
  3. தமிழக அரசின் 47-வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம். மாலைமலர் நாளிதழ். 28 ஜனவரி 2021. https://www.maalaimalar.com/news/district/2021/01/28052224/2299265/Rajeev-Ranjan-appointed-47th-Chief-Secretary-to-Government.vpf. 
  4. தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம். தினமணி நாளிதழ். 31 ஜனவரி 2021. https://www.dinamani.com/tamilnadu/2021/jan/31/tn-chief-secretary-rajiv-ranjan-3554299.html. 
  5. தன்னுடைய இடமாற்றத்திற்கு தானே கையெழுத்திட்ட ராஜீவ் ரஞ்சன். தினமலர் நாளிதழ். 8 மே 2021. https://m.dinamalar.com/detail.php?id=2763763. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜீவ்_ரஞ்சன்&oldid=3855498" இலிருந்து மீள்விக்கப்பட்டது