இராபர்ட் முகாபே

(ராபர்ட் முகாபே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராபர்ட் கேப்ரியல் முகாபே (Robert Gabriel Mugabe, பெப்ரவரி 21, 1924 – செப்டம்பர் 6, 2019) சிம்பாப்வே புரட்சியாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சிம்பாப்வேயின் பிரதமராக 1980 முதல் 1987 வரையும், 1987 முதல் 2007 வரை அரசுத்தலைவராகவும் இருந்துள்ளார். சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியத்தின் தலைவராக 1975 முதல் 2017 வரை இவர் பணியாற்றினார். ஆப்பிரிக்கத் தேசியவாதியாகக் கருதப்பட்ட முகாபே 1970கள்-80களில் மார்க்சிய-லெனினியவாதியாகவும், 1990கள் முதல் சமூகவுடைமையாளராகவும் அடையாளம் காணப்பட்டார். இவரது அரசியல் செயற்பாடுகள் "முகாபேயியசம்" என அழைக்கப்பட்டது.

இராபர்ட் முகாபே
Robert Mugabe
சிம்பாப்வேயின் 2-வது அரசுத்தலைவர்
பதவியில்
31 திசம்பர் 1987 – 21 நவம்பர் 2017
பிரதமர்மோர்கன் சுவாங்கிராய் (2009–2013)
முன்னையவர்கனான் பனானா
பின்னவர்எமர்சன் முனாங்காக்வா
சிம்பாப்வேயின் 1-வது பிரதமர்
பதவியில்
18 ஏப்ரல் 1980 – 31 திசம்பர் 1987
குடியரசுத் தலைவர்கனான் பனானா
முன்னையவர்அபேல் முசோரேவா (சிம்பாப்வே ரொடீசியா)
பின்னவர்மோர்கன் சுவாங்கிராய் (2009)
தலைவர், முதல் செயலர்
சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் (1975–1987)
பதவியில்
18 மார்ச் 1975 – 19 நவம்பர் 2017
முன்னையவர்எர்பர்ட் சிட்டெப்போ
பின்னவர்எமர்சன் முனங்காக்வா
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் 13-வது தலைவர்
பதவியில்
30 சனவரி 2015 – 30 சனவரி 2016
முன்னையவர்முகமது ஊல்டு அப்தல் அசீசு
பின்னவர்திரிசு தேபி
கூட்டுச்சேரா இயக்கத்தின்
10-வது பொதுச் செயலர்
பதவியில்
6 செப்டம்பர் 1986 – 7 செப்டம்பர் 1989
முன்னையவர்ஜெயில் சிங்
பின்னவர்யானெசு திரோவ்செக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இராபர்ட் கேப்ரியல் முகாபே

(1924-02-21)21 பெப்ரவரி 1924
குட்டாமா, தெற்கு ரொடீசியா
இறப்பு6 செப்டம்பர் 2019(2019-09-06) (அகவை 95)
கிளெனீகிலெசு மருத்துவமனை, சிங்கப்பூர்
அரசியல் கட்சிதேசிய மக்களாட்சிக் கட்சி (1960–1961)
சிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் ஒன்றியம் (1961–1963)
சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம் (1963–1987)
சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம்-தேசப்பற்று முன்னணி (1987–2017)
துணைவர்(s)
சலி ஏய்புரொன்
(தி. 1961; இற. 1992)

கிரேசு மாருபு (தி. 1996⁠–⁠2019)
பிள்ளைகள்4
முன்னாள் கல்லூரிபோர்ட் ஹரே பல்கலைக்கழகம்<br /தென்னாப்பிரிக்கப் பல்கலைக்கழகம்
இலண்டன் பன்னாட்டு திட்டங்கள் பல்கலைக்கழகம்
கையெழுத்து

1998 முதல் பல்வேறு நாடுகள் இவரைக் குற்றம் சாட்டியுள்ளனர். இவரின் பொருளாதாரக் கொள்கைகளும், இரண்டாம் கொங்கோ போரில் செலவான குறுக்கிடலும் சிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாயின.[1] 2008இல் இவரின் அரசியல் கட்சி, சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம், முதல் தடவை தேர்தலில் மக்களாட்சி மாற்றல் இயக்கம் என்ற எதிர்க் கட்சியிடம் தோற்றது.

ஆப்பிரிக்க யூனியனின் தலைவராக தொகு

ஆப்பிரிக்க யூனியனின் தலைவராக ராபர்ட் முகாபே 30.1.2015 பொறுப்பேற்றார்.

எத்தியோப்பியத் தலைநகர் ஆடிஸ் ஆபபாவில் நடைபெறும் ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில், முன்னாள் தலைவர் ஏபல் அஜீஸிடமிருந்து இந்தப் பொறுப்பை அவர் பெற்றார்.[2]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_முகாபே&oldid=3580645" இலிருந்து மீள்விக்கப்பட்டது