ராவலாகோட்

பாக்கித்தானில் உள்ள ஒரு நகரம்

ராவலாகோட் (Rawalakot) (உருது: راولا کوٹ ), பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீர் பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். பிர் பாஞ்சல் மலைத்தொடரில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள எல்லைக் கோட்டிற்கு அருகே உள்ளது.

ராவலாகோட்

راولا کوٹ
ராவலாகோட் நகரக் காட்சி
ராவலாகோட் நகரக் காட்சி
ராவலாகோட் is located in Azad Kashmir
ராவலாகோட்
ராவலாகோட்
ராவலாகோட் is located in பாக்கித்தான்
ராவலாகோட்
ராவலாகோட்
ஆள்கூறுகள்: 33°51′12″N 73°45′05″E / 33.85333°N 73.75139°E / 33.85333; 73.75139
நாடுஇந்தியா
பிரதேசம்ஆசாத் காஷ்மீர்
மாவட்டம்பூஞ்ச் மாவட்டம், பாகிஸ்தான்
பரப்பளவு
 • மொத்தம்1,010 km2 (390 sq mi)
ஏற்றம்
1,638 m (5,374 ft)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்78,800
 • அடர்த்தி375/km2 (970/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (PST)
தொலைபேசி குறியீடு05824
நகரங்கள்3
ஊராட்சிகள்21

அமைவிடம் தொகு

பிர் பாஞ்சல் மலைத்தொடரில் 5374 அடி உயரத்தில் ராவலாகோட் நகரம் உள்ளது. இது இந்தியாவின் பூஞ்ச் நகரத்திற்கு கிழக்கே 32 கிமீ தொலைவில் பாகிஸ்தானின் பூஞ்ச் மாவட்டத்தில் ராவலாகோட் நகரம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2015-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ராவலாகோட் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 78,800 ஆகும்.[1]

பூஞ்ச் - ராவலாகோட் பேருந்து சேவைகள் தொகு

இந்தியாவின் பூஞ்ச் நகரத்தையும், பாகிஸ்தானின் ராவாலாகோட் நகரத்தையும் இணைக்கும் சாலைப்போக்குவரத்து பயணியர் பேருந்து சேவைகள் மற்றும் சரக்கு சேவைகள் 2005 மற்றும் 2008 முதல் துவங்கியுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Population of Azad Kashmir Areas". Citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2018-10-15.

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராவலாகோட்&oldid=2795727" இலிருந்து மீள்விக்கப்பட்டது