ராவி ஆறு

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பாயும் ஆறு

ராவி ஆறு (சமஸ்கிருதம்: रवि, பஞ்சாபி: ਰਾਵੀ, உருது: راوی) இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஓடும் ஆறாகும். இதன் நீளம் 720 கிமீ. இமயமலையில் இமாச்சலபிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உற்பத்தியாகி வடமேற்காக பாய்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தென்மேற்காக பாய்ந்து மதோபுர் அருகில் பஞ்சாப் மாநிலத்தை அடைகிறது. 80 கிமீ தொலைவு இந்திய பாகிஸ்தான் எல்லையில் பாய்ந்து இந்த ஆறு பாகிஸ்தானில் நுழைகிறது, அகமதுபூர் சியல் என்னுமிடத்தில்செனாப் ஆற்றுடன் இணைகிறது. லாகூரின் ஆறு எனவும் இதற்கு பெயருண்டு. லாகூர் நகரம் இந்த ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளதால் இப்பெயர் ஏற்பட்டது. மேற்கு கரையில் சதரா (Shahdara) நகரம் அமைந்துள்ளது, இங்கு முகலாய மன்னன் ஜஹாங்கீர் மற்றும் அவன் மனைவி நூர்ஜகான் ஆகியோரின் நினைவிடம் உள்ளது. லாகூர் நகரின் புறநகர் பகுதியாக சதராவை கருதலாம். ராவி ஆற்றின் நீரானது சிந்து நீர் ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

லாகூரில் ராவி ஆறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராவி_ஆறு&oldid=2463540" இலிருந்து மீள்விக்கப்பட்டது