ரூபா ரேவதி (மலையாளம்: രൂപ രേവതിRoopa K. R. என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய இசைக்கலைஞர், வயலின் கலைஞர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இவர் ஒரு பின்னணி பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மலையாளத் திரைப்படம் மதம்பியில் 2008-இல் தனது முதல் பாடலைப் பதிவு செய்தார். தமிழ் மற்றும் கன்னடம் திரைப்படங்களிலும் பாடியுள்ளார். இவர் உண்மைநிலை நிகழ்ச்சி ஒன்றில் அம்ருதா தொலைக்காட்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.[1][2]

ரூபா ரேவதி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்രൂപ രേവതി
இயற்பெயர்ரூபா குன்னும்மெல் ராமபாய்
பிறப்பு31 சூலை 1984 (1984-07-31) (அகவை 39)
எர்ணாகுளம், கேரளம்
இசை வடிவங்கள்பின்னணி பாடகர், கலப்பிசை, கருநாடக இசை, இந்திய இசை, உலக இசை
தொழில்(கள்)வயலின் கலைஞர் & பின்னணி பாடகி
இசைக்கருவி(கள்)வயலின்
இசைத்துறையில்2008–முதல்
இணையதளம்Roopa Revathi official site

வாழ்க்கை தொகு

ரேவதி கேரளாவின் எர்ணாகுளத்தில் பிறந்தார். இவர் மாலினி அரிகரன் மற்றும் தாமரக்காடு கோவிந்தன் நம்பூதிரி ஆகியோரின் கீழ் தனது ஐந்து வயதில் கருநாடக இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

இப்போது, இவர் பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் எம். ஜெயச்சந்திரன் ஆகியோரின் கீழ் இதைத் தொடர்கிறார்.

தொழில் தொகு

ரேவதி 2008ஆம் ஆண்டில் "என்டே சாரிகே" பாடலுடன் பின்னணி பாடகியாக அறிமுகமானார். பி. உன்னிகிருஷ்ணனின் மலையாளப் படமான மதம்பி இசை இயக்குநர் எம். ஜெயச்சந்திரனின் இசையில் பாடினார்.

2011ஆம் ஆண்டில், மலையாளத் திரையுலகில் வயலின் கலைஞராக அறிமுகமானார். பிருத்விராஜ் சுகுமாரன்- நடித்த உருமி எனும் தீபக் தேவ் இசையமைத்த படத்தில் வயலின் கலைஞராகப் பணியாற்றினார்.

உண்மைநிலை நிகழ்ச்சி தொகு

  • 2007-அம்ருதா தொலைக்காட்சி சூப்பர் ஸ்டார் குளோபல் வெற்றியாளர்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Reaching the stars". தி இந்து. n.d. பார்க்கப்பட்ட நாள் 16 October 2014.
  2. 2.0 2.1 "Roopa crowned Amrita Super Star Global: Bags a mercedes". indiantelevision.org.in. n.d. பார்க்கப்பட்ட நாள் 16 October 2014.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபா_ரேவதி&oldid=3920316" இலிருந்து மீள்விக்கப்பட்டது