ரைன் கூட்டமைப்பு

ரைன் கூட்டமைப்பு (The Confederation of the Rhine) 1806 முதல் 1813 வரை நடைமுறையில் இருந்தது. பிரான்சின் முதலாம் நெப்போலியன் ஆஸ்திரியாவின் இரண்டாம் பிரான்சிஸ் மற்றும் உருசியாவின் முதலாம் அலெக்சாந்தர் ஆகியோரைத் தோற்கடித்த பின்னர் நெப்போலியனால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் செருமனியின் 16 மாநிலங்கள் ஒன்றிணைந்தன.

ரைன் கூட்டமைப்பு
Confederation of the Rhine
1806–1813
கொடி of ரைன் கூட்டமைப்பின்
கொடி
Rheinbundmedaille of ரைன் கூட்டமைப்பின்
Rheinbundmedaille
1812 இல் ரைன் கூட்டமைப்பு
1812 இல் ரைன் கூட்டமைப்பு
நிலைபிரெஞ்சுப் பேரரசின் உப-கூட்டமைப்பு
தலைநகரம்பிராங்க்பேர்ட்
காப்பாட்சி 
பிரதமர் (சமயம்) 
• 1806-1813
கார்ல் வொன் டால்பேர்க்
• 1813
யூஜின் டி பியூஹார்னைஸ்
வரலாற்று சகாப்தம்நெப்போலியனியப் போர்
• அமைப்பு
ஜூலை 12 1806 1806
ஆகஸ்ட் 6 1806
• வீழ்ச்சி
அக்டோபர் 19 1813 1813
முந்தையது
பின்னையது
புனித ரோமப் பேரரசு
ஜெர்மன் கூட்டமைப்பு

அமைப்பு தொகு

1806 சூலை 12, தற்போதைய செருமனியின் 16 மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி தமக்கிடையே ரைன் கூட்டமைப்புக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். நெப்போலியன் பொனபார்ட் இவ்வமைப்பின் காப்பாளனாக இருந்தான். நெப்போலியன் விடுத்த காலக்கெடுவை அடுத்து ஆகஸ்ட் 6 இல் புனித ரோமப் பேரரசு கலைக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் 23 ஜெர்மனிய மாநிலங்கள் இவ்வமைப்பில் இணைந்தன. இரண்டாம் பிரான்சிசின் ஹாப்ஸ்பூர்க் வம்சம் மீதமுள்ள பகுதிகளான ஆஸ்திரியாவை ஆண்டனர். ஆஸ்திரியா, புரூசியா, கொல்ஸ்டெயின் (டென்மார்க்), பொமெரானியா (சுவீடன்) ஆகியன இக்கூட்டமைப்பில் இருந்து விலகி இருந்தன.

ரஷ்யா மீதான படையெடுப்பில் நெப்போலியன் தோற்றதை அடுத்து 1813 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைன்_கூட்டமைப்பு&oldid=3778584" இலிருந்து மீள்விக்கப்பட்டது