ரோட் ராஷ் என்பது எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் பந்தய வீடியோ விளையாட்டு வரிசையில் ஒன்றாகும், இது சட்டவிரோத சாலைப் பந்தய விளையாட்டு வீரர்கள் பற்றியதாகும். இந்தப் பந்தயம் முதன்முதலில் சேகா மெகா டிரைவ்/ஜெனசிஸ்க்காக வெளியிடப்பட்டது, அதன் பின்னர் வேறு பல அமைப்புகளிலும் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. 1991 முதல் 1999 வரை ஆறு பல்வேறு மாறுபட்ட விளையாட்டுகள் வெளியிடப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் உரிமம் பெற்ற முணையம் (போர்ட்) கேம் பாய் அட்வான்ஸ்க்காக வெளியிடப்பட்டது. ரோட் ராஷ் மற்றும் அதன் தொடரான மேலும் இரண்டு விளையாட்டுகள் பின்னர் பிஎஸ்பியின் இஏ ரீப்ளே தொகுப்பிற்காக தோன்றியது.

Road Rash
ஆக்குனர் Electronic Arts
வெளியீட்டாளர் Electronic Arts
கணிமை தளங்கள் Sega Mega Drive/Genesis, Atari ST, Commodore Amiga, Sega Master System, Game Boy, Game Gear, 3DO, Sega Mega-CD, Sega Saturn, PlayStation, PC, Nintendo 64, Game Boy Advance
வெளியான தேதி from 1991
பாணி Arcade Racing
வகை Single player, Two Player Multiplayer
ஊடகம் Cartridge, Optical CD
உள்ளீட்டு முறைகள் Gamepad, Keyboard


மோட்டார் சைக்கிளிலிருந்து விழும் போது ஏற்படும் காயத்தினை, அதாவது அதிக வேகத்தினால் தோல் தரையில் உராய்வதால் ஏற்படும் காயத்தினைக் குறிக்கும் வழக்குச் சொல்லைப் பயன்படுத்தி இந்த விளையாட்டிற்கு தலைப்பு வைக்கப்பட்டது.

சுருக்கம் தொகு

ஹாங் ஆன் என்ற விளையாட்டைப் போலவே, இந்த விளையாட்டிலும் விளையாடுபவர் அடுத்த நிலைக்குச் செல்ல சட்டத்திற்கு புறம்பான சாலைப் பந்தயங்களில் வென்று முதல் மூன்று இடத்திற்குள் வர வேண்டும் (மூல விளையாட்டில் முதல் நான்கு இடத்திற்குள் வர வேண்டும்). படிப்படியாக அடுத்த நிலைக்கு முன்னேறும் போது, எதிராளி அதிக வேகமாகவும், மிகக் கடினமாகவும் போராட வேண்டியிருப்பதோடு, பந்தயத்தட நீளம் அதிகமாவதோடு, ஆபத்தானதாகவும் இருக்கும். ஒவ்வொரு பந்தயத்தில் ஈடுபடும் போதும் குறிப்பிட்ட பணம் வருவதோடு ஒவ்வொரு நிலை முன்னேறும் போது பந்தயப் பணமும் அதிகமாகும். இந்தப் பணம் விளையாடுபவர் அதிவேக வண்டிகள் வாங்கி திறம்பட போட்டியிட உதவும். விளையாடுபவர் தமது மோட்டார் சைக்கிள் உடையும் போது அதனை பழுது பார்க்க முடியாவிட்டாலோ, அல்லது கைது செய்யப்பட்டால் அதற்கான அபராதத் தொகையை கட்ட முடியாவிட்டாலோ விளையாட்டு முடிந்து விடும்.

விளையாட்டுமுறை தொகு

ரோட் ராஷ் விளையாட்டில் விளையாடுபவர் செல்லும் பாதை, செங்குத்தாக சீராக ஓடும் வகையில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இந்த விளையாட்டைக் கொண்டுவந்த நேரத்தில் அது கணினிகளில் விளையாட ஏதுவாக இல்லை. பெரும்பாலான பாரம்பரிய பந்தய விளையாட்டுகளில், விளையாடுபவரின் வண்டி அதே செங்குத்துப் பாதையிலேயே இருக்கும். வளைவுகளுக்கு வலது அல்லது இடதை திருப்பும்படி இருக்கும் (போல் பொசிஷன் (Pole Position) (வீடியோ கேம்) விளையாட்டைப் பார்க்கவும்). ரோட் ராஷில் விளையாடுபவர், அதில் ஏற்படும் பல்வேறு தகுதி நிலைக்கேற்ப போட்டியிட வேண்டியிருப்பதோடு, இயற்பியல் விதிகளுடன், இன்றைய விளையாட்டை ஒப்பிடுகையில் மிகவும் அடிப்படை இயக்கங்களாகிய குன்றிலிருந்து ஏறுவது அல்லது இறங்குவது, மற்றும் வளைவுப் பாதையில் ஏறுவது ஆகியவற்றை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. இவ்வாறு செய்வதனால் ஒருவர் மோட்டார் சைக்கிளைக் கொண்டு அதிக தூரத்திற்குத் தாண்டி, மிகவும் வேடிக்கையான அசைவூட்ட விபத்துகள் உண்டாக்குவர். இவ்விளையாட்டில் பந்தயச் சூழல், மிகவும் இயல்பாக இருக்கும் வகையில் விளையாட்டு வீரரின் வண்டி, சாலை அறிவிப்பு பலகைகள், மரங்கள், கம்பங்கள் மற்றும் பிராணிகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.[1] இந்த விளையாட்டே முதன் முதலில் அதிவேக போக்குவரத்தை அறிமுகப்படுத்தி மிக யதார்த்தமான சூழலை உருவாக்கியது. இதில் விளையாட்டு வீரர் மெதுவாகச் செல்லும் சரக்கு வண்டி முதல் அவருடன் பந்தயத்தில் ஈடுபடும் மற்ற மோட்டார் வீரர்களின் அதி வேக வண்டி வரை அனைத்துடனும் போட்டி போட்டு செல்ல வேண்டியிருக்கும். அதிக வேகம், சுழன்றடிக்கும் காற்று மற்றும் சுவாரசியமான விபத்துகள் மட்டுமன்றி ரோட் ராஷை மற்ற பந்தய விளையாட்டுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது அதில் போராட பயன்படுத்திய ஆயுதங்கள். விளையாட்டு வீரர் மற்ற வீரர்களுடன் பல்வேறு விதமான ஆயுதங்களை கையிலேந்தி போராட முடியும். முதலில் விளையாடுபவர் தனது கைகள் அல்லது காலை பயன்படுத்த வேண்டும். சரியான நேரத்தில் தாக்கி விட்டால், மற்றொரு ஓட்டுனரிடமிருந்து ஆயுதத்தை பறித்துக் கொள்ளலாம். தடி, கடப்பாரை, நுன்சக்கு மற்றும் சாட்டை எனத் தேர்ந்தெடுக்க பல்வேறு ஆயுதங்கள் இருக்கும். ஓட்டுபவர்களுக்கிடையே நடக்கும் இந்தச் சண்டைகள் பாதசாரிகள், சாலை ஓர இடைஞ்சல்களுக்கிடையே போக்குவரத்து நிறைந்த இடத்தில் அதிக வேகத்தில் செல்லும் போது நடக்கும். இதில் வெற்றி பெறுபவர் முன்னேறிச் செல்வர். தோற்றவரின் வண்டி சேதம் அடைவதுடன் நேரத்தையும் இழப்பர்.

இந்த விளையாட்டில் மோட்டார்சைக்கிள் காவல் அதிகாரிகள் இருவிதமான பாத்திரங்களில் விளையாடுபவருக்கு எதிராக செயல்படுவர். அவர் விளையாடுபவரை எதிர்த்து சண்டையிடுவார். மேலும் விளையாட்டு விதிகளை அமலுக்கு கொண்டு வருவார். அதிக தூரத்தில் விழுபவர் முதல் பந்தயத்தில் ஈடுபடாமல் சுற்றி வரும் வீரர்கள் வரை கண்டுபிடிப்பதும் இவரது பணி. மற்றொரு விளையாட்டு வீரரிடம் தோற்பதை விட காவல் துறை அதிகாரியிடம் தோற்பது அதிக பிரச்சினையை ஏற்படுத்தும்: அதிகாரியிடம் சண்டையில் தோற்பது அல்லது அவரால் பிடிபடுவது இரண்டுமே விளையாடுபவர் "தோல்வி"யைத் தழுவ வைத்து பந்தயத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடும்.

முதலில் வந்த விளையாட்டுகளில் ஒவ்வொரு பந்தயமும் ஒரே ஒரு சாலையை மட்டுமே கொண்டு இருக்கும். விளையாடுபவர் விளையாட்டில் முன்னேறி அடுத்த நிலைக்கு செல்லும் போது, ஆட்டப் பாதை நீண்டு இருக்கும். பின்னர் வந்த விளையாட்டுகளில் ஒன்றுடன் ஒன்று பிணைந்த வலைப்பின்னலாக சாலை உருவாக்கப்பட்டது.

ஒலி தொகு

ஆதார மெகா டிரைவ்/ஜெனசிஸ் விளையாட்டில் ராப் ஹப்பர்ட் என்பவரின் ஒலித்தடம் பயன்படுத்தப்பட்டது.[2]ரோட் ராஷ் விளையாட்டே முதன் முதலில் வீடியோ கேம்களில் அதிக ஆதரவு பெற்ற பெரிய இசைக் கலைஞர்களின் உரிமம் பெற்ற இசைத்தடங்களை பயன்படுத்தியது.[3]

வெளியீடுகள் தொகு

ரோட் ராஷ் தொகு

ரோட் ராஷ் முதலில் 16-பிட் சேகா மெகா டிரைவ்/ஜெனசிஸ்சில் இயங்கியது. அனைத்து பந்தயங்களும் கலிபோர்னியாவின் இருவழிப்பாதை சாலையை ஒத்து இருந்தது. இருவர் விளையாடும் பந்தயமாக இருந்த போதிலும், ஒருவர் விளையாடிய பின் அடுத்தவர் விளையாடும் வகையில் இருந்தது.

போட்டிப் பாதையின் குறிப்புகள். விளையாடுபவர் ஒவ்வொரு நிலையாக மாறி பயணிக்கும் போது அவர் செல்லும் பாதையில் பெரும்பான்மையானவை கலிபோர்னியா மாநிலப் பாதையை ஒத்த நெடுஞ்சாலை அறிவிப்புப் பலகைகளுடன் இருக்கும். நிலையைத் தேர்ந்தெடுக்க, துவக்கிய பிறகு தேர்வுத் திரையில் வலது என்பதை அழுத்த வேண்டும்:

  • சியாரா நெவாடா (CA 89)
  • பசிபிக் கோஸ்ட் (CA 1)
  • ரெட்வுட் பாரஸ்ட் (நெடுஞ்சாலைக் குறிகள் இல்லை)
  • பாம் டெசர்ட் (CA 74)
  • கிராஸ் வாலி (CA 49)

தேர்ந்தெடுக்க எட்டு விதமான பைக்குகள் மற்றும் இரண்டு விதமான ஆயுதங்கள் உள்ளது: கை முட்டி மற்றும் தடிகள். இந்த விளையாட்டை கேம் கியர் மற்றும் சேகா மாஸ்டர் சிஸ்டமில் வெளியிட்ட பின், ஜெனசிஸ் தொடரின் ஒரே ரோட் ராஷ் விளையாட்டாக அறிமுகப்படுத்தி மற்ற முனையங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

ரோட் ராஷ் II தொகு

ரோட் ராஷ் II , முதலில் வெளி வந்த விளையாட்டின் தொடர்ச்சியாக அதற்கு அடுத்த வருடம் 1992 ஆம் ஆண்டு சேகா ஜெனசிஸ்சிலேயே வெளியிடப்பட்டது. ரோட் ராஷ் II முதல் ரோட் ராஷ் விளையாட்டைப் போலவே அதே என்ஜின், அசைவூட்டத்தைக் கொண்டிருந்தது. பந்தயங்கள் அமெரிக்க மாநிலங்களான அலாஸ்கா, ஹவாய், டென்னசி, அரிசோனா மற்றும் வெர்மான்ட் போன்ற இடங்களில் நடைபெற்றது.

விளையாட்டில் கண்கூடாக தெரியும் வேறுபாடு மெனுத் திரை மாற்றம் ஆகும். ரோட் ராஷ் II மெனுத் திரை கையாளுவதை மிகவும் எளிதாக்கியதோடு, கடவுச் சொல் பயன்படுத்தும் போது, முதல் பதிப்பில் பயன்படுத்திய அளவில் பாதிக்கும் குறைவாக அளித்தாலே போதுமானதாக மாற்றியது. பல்வேறு விளையாட்டு நிலைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரோட் ராஷ் II பலராலும் மிகவும் சிறந்த ரோட் ராஷ் விளையாட்டாக கொண்டாடப்பட்டது. இரு வீரர் விளையாட்டு பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையைப் பயன்படுத்தும் போது அதன் சிறிய திரைப் பரப்பு, அதில் சராசரி காட்சிகள் நகரும் வேகம் குறைவாக இருந்தது போன்றவை இந்தப் பதிப்பில் கடும் விமர்சனத்திற்கு உள்ளான குறைபாடுகளாகும். ரோட் ராஷ் II விளையாட்டுக்கு ஹானஸ்ட்கேமர்ஸ் வலைதளத்தில் 9/10 மதிப்பெண் அளிக்கப்பட்டது.[4]

ரோட் ராஷ் III: டூர் டே போர்ஸ் தொகு

இறுதியாக சேகா மேகா டிரைவ், 1995 ஆம் ஆண்டில் ரோட் ராஷ் III: டூர் டே போர்ஸ் என்ற பதிப்பை வெளியிட்டது. அனைத்து பந்தயங்களும் 7 இல் 5 நாடுகளில் நடைபெறும். ஒவ்வொரு நிலைக்கும் வெவ்வேறு பந்தயப் பாதையை தேர்ந்தெடுக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது: அவை பிரேசில், இங்கிலாந்து (ஐல் ஆப் மேன்க்கு இதன் விவரிப்பில் மரியாதை அளிக்கப்பட்டிருந்தது), ஜெர்மனி, இத்தாலி, கென்யா, ஆஸ்திரேலியா, மற்றும் ஜப்பான் ஆகியவை.

தேர்ந்தெடுக்க பதினைந்து வகையான பைக்குகள் உள்ளதோடு, ஒவ்வொன்றையும் 4 முறை மேம்படுத்த முடியும். எட்டு விதமான ஆயுதங்கள் உள்ளன. விளையாட்டை மாற்றி அமைக்காத வரை விளையாடுபவர் பந்தயங்களுக்கிடையேயும் ஆயுதங்களை ஏந்திச் செல்லலாம்.

முதல் இரண்டு பதிப்பைப் போலல்லாது, இந்தப் பதிப்பில், "கார்ட்டூன்" உருவங்களுக்குப் பதிலாக, எண்மருவி முறையில் உருவாக்கப்பட்ட உருவங்களைப் பயன்படுத்தியது பெரிய மாறுதலாக இருந்தது.

ரோட் ராஷ் (3DO) தொகு

ரோட் ராஷ் விளையாட்டின் பெயரை, ஜெனசிஸ்சில் வழங்கப்பட்ட பெயரிலிருந்து மாறுபடுத்திக் காட்ட ரோட் ராஷ் 3D அல்லது ரோட் ராஷ் 3DO என அழைக்கப்பட்டது. முதலில் 3DO விற்காக வெளியிடப்பட்டது. பின்னர் சோனி ப்ளே ஸ்டேஷனுக்காகவும், சேகா சாட்டர்ன் மற்றும் பிசிக்காக வெளியிடப்பட்டது. சூப்பர் நின்டெண்டோவுக்கு ஒரு பதிப்பு வெளியிட திட்டமிட்டனர். அதனை பின்னர் ரத்து செய்து விட்டனர்.[சான்று தேவை] இதனை மேலும் மேம்படுத்த, இந்த விளையாட்டில் முழு நீள வீடியோ பதிப்பைப் கொண்டு வரப்பட்டது.

இவ்விளையாட்டில் மொத்தம் ஐந்து நிலைகள் மற்றும் ஐந்து பாதைகள் உள்ளன. அனைத்தும் கலிபோர்னியாவில் உள்ள பாதைகைளாகும். அவை, நகரம், தீபகற்பம், பசிபிக் சமுத்திர சாலை, சியாரா நெவாடா மற்றும் நாபா சமவெளியாகும். அந்தச் சாலைகள் பல்வழி பாதைகள் கொண்டனவாகவும் அங்காங்கே பகுக்கப்பட்டும் காணப்பட்டது.

இந்த ஆட்டத்தின் குறிக்கோள் இதன் மற்ற பதிப்புகளைப்போலவே "ஆட்டம் முடிந்தது" அல்லது "மாட்டிக்கொண்டாய்" போன்ற வாசகங்கள் வருவதற்குமுன் இருக்கும் 14 நிலைகளில் முதல், இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையை அடைந்தால் ஆட்டம் தானாக அடுத்த நிலைக்கு முன்னேறும். ஆட்ட நிலை முன்னேற்றத்தில் சாலை நீளம் மற்றும் போக்குவரத்து அதிகமாய் இருக்கும். அதேபோல் சாலை விதிகளை மீறினால் காவலதிகாரிகளிடமிருந்து அதிக அபராதத்தொகையும், வெற்றிகரமாக நிறைவு செய்தால் மிகுந்த வெகுமானமும் பெறுவர்.

விளையாடுபவர் அவர் விரும்பும் பாத்திரத்தை தேர்வு செய்வார். அதற்கு குறிப்பிட்ட பணத்தை செலுத்தி தனிப்பட்ட மோட்டார் சைக்கிளோடு அதனைப் பெறுவர். இதில் போட்டியாளர்களின் பெயர்கள் அதன் முதல் பதிப்பில் வெளிவந்த பெயர்களாகிய "ஆக்சில்" மற்றும் "ரோண்டா" ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாத்திரங்கள் இதன் சக போட்டியாளர்கள் மத்தியில் மதிப்பைப் பெற்றிருந்தது. பந்தயத்திற்குப் பின் இதனைப் பார்க்க இயலும். என்பிசியின் விருப்பத்திற்கேற்ப (சிலருக்கு மோதல் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது), போட்டியாளர்கள் பந்தயத்தின் போது அவர்கள் எவ்வாறு கையாளப்பட்டனர் என்பதற்கேற்ப விளையாட்டு வீரரிடம் நடந்து கொள்வர்.

ரோட் ராஷினை 32-பிட் வீட்டு விளையாட்டு திரைகளில் கொண்டு வந்த போது, அவை முதலில் 3DO பதிப்பில் வெளி வந்தது. இந்த பதிப்பில் வெளிவந்த நான்காவது விளையாட்டாக இது இருந்த போதும் அனைத்துமே "ரோட் ராஷ்" என்றே அழைக்கப்பட்டது. அதன் வழிசார் வெளிவந்த பதிப்புகள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் நின்டெண்டோ 64 மென்பொருளில் பயன்படுத்துவதற்கேற்ப மேம்படுத்தப்பட்டும், சேகா மெகா சிடி, கையில் வைத்து ஆடும் சாதனத்திற்கேற்ப சிக்கல் குறைந்த முறையிலும் வடிவமைக்கப்பட்டது.

இசை தொகு

3DO விளையாட்டுகளின் இசைத்தடத்தில் எ&எம் ரெகார்ட்ஸ் இசை வல்லுனர்கள் சவுன்ட் கார்டன், பா, ஹேமர்பாக்ஸ், தெரபி?, மான்ஸ்டர் மேக்னட் மற்றும் ஸ்வர்வ் டிரைவர் போன்றவர்களின் 14 விதமான இசைத் தடங்கள் பயன்படுத்தப்பட்டது.[5][6] ரோட் ராஷை 3DO விற்கு வெளியிடுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் 3DO 1994 ஆம் ஆண்டின் சிறந்த இசைத்தடத்திற்கான (சவுன்ட்டிராக் ஆப் தி இயர்) விருதைப் பெற்றது. இறுதி பதிப்பில் வாகனக்கூடத்தில் இசைப்பயிற்சி செய்யும் குழுக்கள் மற்றும் பிரபலமாகாத சங்கீத குழுக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்து அவர்கள் பாடல்கள் அடங்கிய ஒலி நாடாக்களை பெற்று அதனை விளையாட்டின் இசையில் பயன்படுத்தி அவர்கள் இசை மக்களிடயே சென்று சேர ஒரு வாய்ப்பு அளித்தது.[3]

பைக்குகள் தொகு

விளையாடுபவர்கள் மோட்டார்சைக்கிளை அதன் விலைக்கேற்ப மூன்று விதமான பிரிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்: விளையாட்டு/ஜிடி பைக்குகள், நிஜ பந்தயத்திற்கு பயன்படுத்தும் வாகனப் பிரதிகள் மற்றும் போர்க்கப்பல்கள். விளையாட்டு/ஜிடி பைக்குகள் ஐரோப்பிய சுற்றுலா பைக்குகளை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது—இவை நடுத்தர எடை மற்றும் நடுத்தர சக்தியுடன் இருந்தது. பந்தய வாகனப் பிரதிகள் ஜப்பானிய சூப்பர் பைக்குகளை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது—இவை மிகவும் வேகமாகச் செல்லும், இவற்றின் எடை குறைவாக இருக்கும். போர்க்கப்பல்கள் அமெரிக்க மாதிரிகள்—சிறிது எடை அதிகமாக இருக்கும், நேர்க்கோட்டு சக்தி அதிகமாக இருக்கும். 32-பிட் அறிமுகப்படுத்திய நான்காவது வகை எலி பைக்குகள் பிராங்கைன்ஸ்டெய்ன் மாதிரி பைக். வேகமாக செல்லக்கூடியவை மற்றும் உறுதியானவை. மேல் நிலையில் குறிப்பிட்ட பைக்குகள் N2O சக்தி அளிக்கப்பட்டிருக்கும்.

வரவேற்பு தொகு

மீன் மெஷின்ஸ் பத்திரிகையில் ரோட் ராஷ் விளையாட்டுக்கு ஆதரவாக கட்டுரை வெளி வந்தது. இறுதி மதிப்பெண்ணாக 91% பெற்றது. மேலும் இதனுடைய இசை, வரைகலை மற்றும் விளையாட்டு முறை புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது.[7] ரோட் ராஷின் கம்மொடோர் அமிகா வெளியீடு ஓரளவு நல்ல மதிப்பீட்டைப் பெற்றது. அமிகா பார்மட்டில் [8] 84%ம் சியூ அமிகா வில் 81%ம் பெற்றது.[9]அமிகா பவர் இந்த வெளியீட்டைப் பற்றி மிகவும் மோசமான திறனாய்வை வெளியிட்டிருந்தது. இந்த விளையாட்டிற்கு 70% மதிப்பீடு அளித்திருந்தது.[10] இந்த விளையாட்டு எலக்ட்ரானிக் கேமிங் மன்த்லியில் 1994 ஆம் ஆண்டிற்கான வீடியோ கேம் விருதுகளில், ஓட்டுவதில் சிறந்த விளையாட்டு, குறுந்தகடு சார்ந்த விளையாட்டில் சிறந்த இசையுள்ள ஆட்டம், சிறந்த 3DO விளையாட்டு, எலக்ட்ரானிக் கேமிங் மன்த்லியின் 1994 ஆம் ஆண்டிற்கான சிறந்த 3DO விளையாட்டுக்கான விருது என பல்வேறு விருதுகளைப் பெற்றது.[11]

ரோட் ராஷ் 64 தொகு

1994 ஆம் ஆண்டில் நின்டெண்டோ 64க்கான ரோட் ராஷ் 64 வெளியிடப்பட்டது. இதனை எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் வடிவமைத்து வெளியிடவில்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. அதற்குப் பதிலாக, இந்த விளையாட்டின் அறிவுசார் சொத்திற்கான உரிமம், டி.எச்.கியூ.விற்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த விளையாட்டை பசிபிக் கோஸ்ட் பவர் & லைட் (இ.ஏ.வின் முன்னாள் ஊழியரான டான் ட்ரேகர் நிறுவியது) என்ற அதன் சொந்த படமனையில் வடிவமைத்தது.

ரோட் ராஷ் 64 விளையாட்டை எப்-ஜூரோ எக்ஸ்சை ஒத்த வகையில் வடிவமைத்தனர். இது மிகவும் குறைந்த பாலிகான் மாதிரிகள், குறைந்த தெளிவுத்திறன் அமைப்புகள் மற்றும் சில சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது. பல்வேறு விதமான மோட்டார் சைக்கிள்கள், சாலை போக்குவரத்து மாதிரிகள் மற்றும் பல்வேறு இடைஞ்சல்களுடன் விளையாடும் வகையில் கொண்டுவந்ததுடன் இதன் திரை விகிதமும் மிக அதிகமாக இருந்தது. 16-பிட் விளையாட்டில் வெளிவந்ததைப் போன்றே இந்த விளையாட்டிலும் போர்த் தந்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதன் தனி நபருக்கேற்ற திரை அமைப்புகளை மாற்றும் திறன் முந்தைய விளையாட்டுகளை விட சிறப்பாக இருந்தது.

என்64 வெளியிட்ட நினைவக விரிவாக்க தொகுப்பை வைத்திருப்பவர்கள் பெரிய திரை, அஞ்சற்பெட்டி மற்றும் இயல்பான வரைகலை அமைப்புகளுடன் அதிக தெளிவுத்திறன் அமைப்புகளை தேர்ந்தெடுக்க முடியும். இந்த விளையாட்டில் ரோட் ராஷ் 3D விளையாட்டிலிருந்து ஐந்து இசைத்தடங்களை ஆடியோ சுருக்க மென்பொருள் மூலம் பயன்படுத்தியுள்ளது.

முன்பு வெளிவந்த விளையாட்டுகளில் தனிப்பட்ட இடங்களின் ஒரே பெரிய சாலையை பயன்படுத்தியதைப் போலின்றி, ரோட் ராஷ் 64 விளையாட்டில், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஒரே சாலை அமைப்பில் பந்தயங்கள் நடைபெற்றது. பிரிந்து செல்லும் பல்வேறு கிளைப் பாதைகளை இணைத்து பந்தயப் பாதைகள் அமைக்கப்பட்டது. விளையாட்டு உலகின் நான்கு முனைகளும் வெவ்வேறு நில அமைப்பு அம்சங்களை கொண்டு இருந்தது. முதல் நிலையை தாண்டிய பிறகு, பந்தயங்கள் வெவ்வேறு இடங்களுக்கிடையே அல்லது வெவ்வேறு இடங்கள் வழியே நடைபெறும்.

ரோட் ராஷ்: ஜெயில் பிரேக் தொகு

ரோட் ராஷ்: ஜெயில் பிரேக் 1999 ஆம் ஆண்டில் பிளேஸ்டேஷனுக்காக வெளியிடப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் கேம் பாய் அட்வான்சிற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது. இதன் முக்கிய விளையாட்டு உறுப்பாக ஒன்றுடன் ஒன்று பிணைந்த சாலை அமைப்பையும் இரண்டு விளையாட்டு வீரர்கள் பகிர்ந்து விளையாடும் வகையில் சைட்காரையும் கொண்டு வந்தது.

கேம் பாய் அட்வான்சிற்கான ரோட் ராஷ்: ஜெயில் பிரேக் மெட்டா கிரிட்டிக்கில் 67% மதிப்பெண் பெற்றதோடு கலவையான ஆய்வறிக்கையைப் பெற்றது.[12]

மற்ற வெளியீடுகள் தொகு

2006 நவம்பரில் எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் கையடக்க பிளேஸ்டேஷனுக்காக இஏ ரீப்ளே என்பதை வெளியிட்டது. இதில் ரோட் ராஷ் I , II மற்றும் III இருந்தது. ரோட் ராஷ் I விளையாட்டில், ராப் ஹப்பர்ட்டின் மூல இசைத்தடம் இல்லை மற்றும் ரோட் ராஷ் III விளையாட்டு கம்பியற்ற பல்லிசை (வயர்லஸ் மல்ட்டிப்ளேயர்) இசைத்தடம் இருந்தது.[13]

குறிப்புதவிகள் தொகு

  1. Road Rash Sega Game Gear Manual. U.S. Gold. 1991. பக். 12. 
  2. "Road Rash Technical Details". கேம்ஸ்பொட் இணையத்தளம். Archived from the original on 2009-03-25. பார்க்கப்பட்ட நாள் 2007-10-12.
  3. 3.0 3.1 "Electronic Arts and BAM Magazine Announce the Road Rash Music Search". Business Wire. 1999-05-28. பார்க்கப்பட்ட நாள் 2007-10-12.
  4. K T (2005-06-10). "Road Rash II (Genesis) review on HonestGamers". HonestGamers. http://www.honestgamers.com/systems/content.php?game_id=3728&console_id=11&review_id=3812. பார்த்த நாள்: 2009-10-29. 
  5. Brown, Matt. "Road Rash: Review by Matt Brown". ibiblio. பார்க்கப்பட்ட நாள் 2007-12-26.
  6. "Electronic Arts and Atlantic Records Sign Licensing Agreement for Road Rash 3D". Business Wire. 1998-03-10. Archived from the original on 2012-07-08. பார்க்கப்பட்ட நாள் 2007-10-12.
  7. Rignall, Julian (September 1991), "Road Rash Review from Mean Machines", Mean Machines, EMAP
  8. "Road Rash Review from Amiga Format author=Jackson, Neil", Amiga Format, Future Publishing, December 1992 {{citation}}: Missing pipe in: |title= (help)
  9. "Road Rash Review from CU Amiga", CU Amiga, EMAP, November 1992
  10. Campbell, Stuart (July 1992), "Road Rash review from Amiga Power", Amiga Power
  11. Electronic Gaming Monthly's Buyer's Guide. 1995. 
  12. "Road Rash Jailbreak Review". Metacritic. Archived from the original on 2010-01-22. பார்க்கப்பட்ட நாள் 2007-10-12.
  13. Sinclair, Brendan (2006-08-31). "EA confirms Retro Replay". கேம்ஸ்பொட் இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 2007-10-12.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோட்_ராஷ்&oldid=3575838" இலிருந்து மீள்விக்கப்பட்டது