ரோதங் கணவாய்

ரோதங் கணவாய் (இந்தி: रोहतांग दर्रा, ஆங்கிலம்: Rohtang Pass) இமயமலைத் தொடரின் பிர் பாஞ்சல் பகுதியில் மணாலியிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது குலு பள்ளத்தாக்கையும் லாஹௌல் மற்றும் ஸ்பிடி பள்ளத்தாக்கையும் இணைக்கிறது. இது இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 21 இதன் வழியாகச் செல்கிறது.

ரோதங் கணவாய்
ஏற்றம்3,979 மீ (13,054 அடி)
Traversed byலே-மணாலி நெடுஞ்சாலை
அமைவிடம் இந்தியா
மலைத் தொடர்பிர் பாஞ்சல், இமயமலை

நிலவமைப்பு தொகு

இந்தக் கணவாய் புத்தமதத்தினர் வாழும் வடக்குப் பகுதியையும் இந்து மதத்தினர் வாழும் தெற்குப் பகுதியையும் இயற்கையாகப் பிரிக்கிறது. இப்பகுதியில் இரண்டு நதிகள் ஓடுகின்றன. பியாஸ் நதி தெற்குப் பக்கமும், செனாப் நதி வடக்குப் பக்கம் மேற்கு நோக்கி ஓடுகிறது.

இந்தக் கணவாய் மே முதல் நவம்பர் மாதம் வரை திறந்திருக்கும். இந்தக் கணவாயைக் கடந்து செல்வது இமயத்தின் பிற பகுதிகளைப் போல் கடினமானது அல்ல. ஆனால் எதிர்பாராத பனிப்பொழிவுகள் ஏற்படுவதால் சற்று அபாயகரமானது..[1] இந்தக் கணவாயானது பழங்காலத்தில் பிர் பாஞ்சால் பகுதியினரின் வணிகப் போக்குவரத்துப் பாதையாக இருந்திருக்கிறது. தற்போது இதன் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 21 கோடைகாலங்களில் அதிக போக்குவரத்து மிகுந்து காணப்படும். இராணுவத்தினரின் முக்கியப் பாதையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Janet Rizvi (1998-06-01). Ladakh: Crossroads of High Asia. Oxford University Press. pp. 9-10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-564546-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோதங்_கணவாய்&oldid=3583342" இலிருந்து மீள்விக்கப்பட்டது