லக்கிடி, பாலக்காடு

கேரளத்தின் பாலக்காடு மாவட்டதில் உள்ள சிற்றூர்

லக்கிடி அல்லது லக்கிடி பெருர் (Lakkidi or Lakkidi Perur) என்பது இந்தியாவின், கேரளத்தின் ,பாலக்காடு மாவட்டத்தின் ஒற்றைப்பாலம் வட்டத்ததில் உள்ள ஒரு சிற்றூராகும். இது   பாலக்காடு - பட்டம்பி சாலையில் பாலக்காடுக்கு மேற்கே 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள நகரம் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஒற்றைப்பாலம் ஆகும். இது மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து 303 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. லக்கிடி ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 679301 மற்றும் தொலைபேசி குறியீடு 0466 ஆகும்.

லக்கிடி
Lakkidi Perur
சிற்றூர்
மகாதேவர் கோயில், கிள்ளிக்குறிச்சிமங்கலம்
மகாதேவர் கோயில், கிள்ளிக்குறிச்சிமங்கலம்
லக்கிடி is located in கேரளம்
லக்கிடி
லக்கிடி
இந்தியா, கேரளத்தில் அமைவிடம்
லக்கிடி is located in இந்தியா
லக்கிடி
லக்கிடி
லக்கிடி (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°45′52″N 76°26′22″E / 10.76444°N 76.43944°E / 10.76444; 76.43944
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
679301
தொலைபேசி குறியீடு0466 2230000
வாகனப் பதிவுKL-51,KL-9
அருகில் உள்ள நகரம்ஒற்றைப்பாலம்
எழுத்தறிவு100%%
மக்களவை தொகுதிபாலக்காடு

வரலாறு தொகு

இந்த இடம் முதலில் வள்ளுவநாடு ஸ்வரூபம் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்தது. [1] வள்ளுவநாடு என்பது தென்னிந்தியாவின் தற்போதைய கேரள மாநிலத்தில் இடைக்கால சிற்றரசாக இருந்தது, தெற்கில் பாரதப்புழா ஆற்று முதல் வடக்கில் பந்தலூர் மலை வரையிலும், மேற்கில் அரபிக் கடலாலின் பொன்னானி, துறைமுகத்திலிருந்தும், கிழக்கில் அட்டப்பாடி மலைகளாலுக்கு இடையிலும் இந்த அரசு இருந்தது.

லக்கிடியைச் சேர்ந்த கிள்ளிக்குறிச்சி மங்கலம் 18 ஆம் நூற்றாண்டய கவிஞர் குஞ்சன் நம்பியார் பிறந்த இடமாகும். இவர் துள்ளல் ஆட்டம் மற்றும் அதற்கான பாடல்களுக்கான மதிப்பைத் தேடித்தந்தார். மலையாள இலக்கியத்தில் நய்யாண்டி பாணியை புகுத்திய இவர் பிறந்த இல்லம் கேரள அரசால் நினைவில்லமாக பாதுகாக்கபட்டுவருகிறது.

குறிப்புகள் தொகு

  1. "princelystatesofindia.com". Archived from the original on 16 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்கிடி,_பாலக்காடு&oldid=3031203" இலிருந்து மீள்விக்கப்பட்டது