லான்சு குளுசுனர்

லான்சு குளுசுனர் (Lance Klusener, பிறப்பு 4 செப்டம்பர் 1971) சகலத் துறையராக விளங்கிய முன்னாள் தென்னாபிரிக்க துடுப்பாட்டக்காரர் ஆவார். இவரது அதிரடி துடுப்பாட்டத்திற்காகவும் அலையுறு விரைவு வீச்சிற்காகவும் அறியப்பட்டவர். இவர் சூலு மொழியை நன்கு அறிந்திருந்தமையால் "சூலு" என்று செல்லமாக அழைக்கப்பட்டார். 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உலகக்கிண்ண நாயகனாக தெரிவானார். தென்னாபிரிக்காவின் மிகுந்த திறனுள்ள துடுப்பாளராக விளங்கினார்.

லான்சு குளுசுனர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லான்சு குளுசுனர்
பட்டப்பெயர்ஸூலூ
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு மிதம்
பங்குசகலத்துறையர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 265)27 நவம்பர் 1996 எ. இந்தியா
கடைசித் தேர்வு8 ஆகத்து 2004 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 40)19 சனவரி 1996 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப19 செப்டம்பர் 2004 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1991-2004குவாசுலு-நடால் துடுப்பாட்ட அணி
2002நாட்டிங்காம்சையர்
2004மிடில்செக்ஸ்
2004-2007டொல்பின் துடுப்பாட்ட அணி
2004-2008நார்த்தாம்டன் (squad no. 4)
2006-2008ராயல் பெங்கால் டைகர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒரு முத ஏ-தர
ஆட்டங்கள் 49 171 197 323
ஓட்டங்கள் 1906 3576 9521 6623
மட்டையாட்ட சராசரி 32.86 41.10 42.69 39.89
100கள்/50கள் 4/8 2/19 21/48 3/34
அதியுயர் ஓட்டம் 174 103* 202* 142*
வீசிய பந்துகள் 6887 7336 31735 13433
வீழ்த்தல்கள் 80 192 508 332
பந்துவீச்சு சராசரி 37.91 29.95 30.40 31.63
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 6 20 8
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 - 4 -
சிறந்த பந்துவீச்சு 8/64 6/49 8/34 6/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
34/- 35/- 99/- 82/-
மூலம்: Cricinfo, 1 அக்டோபர் 2009

இவரின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட மட்டையாளர் சராசரி 41.0 ஆகவும், பந்து வீச்சு சராசரி 29.0 ஆகவும் உள்ளது. சிறந்த தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். முதல் தரத் துடுப்பாட்டங்களிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். முதல்தரத் துடுப்பாட்டங்களில் மட்டையாளர் சராசரி 43.0 ஆகவும், பந்து வீச்சு சராசரி 30.0 ஆகவும் உள்ளது.

சர்வதேச போட்டிகள் தொகு

1996-1997 ஆம் ஆண்டில் கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் அரங்கத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் , தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியில் அறிமுகமானார். துவக்கத்தில் பந்துவீச்சிற்காக அணியில் சேர்க்கப்பட்டார். அந்த சமயத்தில் முகமது அசாருதீன் போன்ற வீரர்கள் இந்திய அணியில் இருந்தனர். முதல் பகுதி ஆட்டத்தில் இவரின் பந்துவீச்சில் அசாருதீன் தொடர்ச்சியாக நான்கு, நான்குகள் (ஃபோர்) அடித்தார். ஆனால் இரண்டாவது பகுதியில் சிறப்பாக பந்து வீசிய இவர் 64 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 8 இலக்குகள் எடுத்தார். இந்த பந்துவீச்சே இவரின் சிறப்பான பந்துவீச்சு ஆகும்.[1]

குளூசுனர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். குறிப்பாக அதிரடி மட்டையாளர்களுக்கு இவர் அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினார். 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் தொடர்நாயகன் விருதினைப் பெற்றார். அதே தொடரில் மட்டையாளராகவும் தனது பங்களிப்பை சிறப்பான முறையில் அளித்து அணி இறுதிப் போட்டிக்குச் செல்வதில் மிக முக்கியமான பங்காற்றினார். அடிபந்தாட்டம் போன்ற இவரின் பாங்கு மூலமாக சிறப்பாக செயல்பட்டார். மேலும் 2000 ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இவரை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது.

குளூசுனரின் கனுக்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து இவரின் துடுப்பாட்ட வாழ்க்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. மேலும் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் தலைவர் கிரயெம் சிமித் உடனான சில பிரச்சினைகளும் இவரின் வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டன. தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியில் உள்ள இளம்வீரர்களுக்கு குளூசுனர் அச்சுறுத்தும் வீரராக உள்ளார் என கிரெயம் சிமித் தெரிவித்தார்.[2] இருந்தபோதிலும் இவர்கள் இருவரும் தங்களுக்கு இடையே இருந்த வேற்றுமைகளை மறந்தனர்.[3][4]

இவர் மொத்தமாக 49 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 1,906 ஓட்டங்களும் 80 இலக்குகளையும் வீழ்த்தியுள்ளார். இவரின் அதிகபட்ச ஒட்டங்கள் 174 ஆகவும், சிறந்த பந்துவீச்சு இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான 8/64 ஆகும். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் 171 போட்டிகளில் விளையாடி 3,576 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 103 ஓட்டங்களை 41.1 எனும் சராசரியுடன் எடுத்தார். மேலும் 192 இலக்குகளையும் வீழ்த்தினார். இவரின் சிறந்த பந்துவீச்சு 6/49 ஆகும்.

1999 உலகக் கிண்ணம் தொகு

1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக் கிண்ணக் கோப்பைத் தொடரில் இவர் விளையாடினார். அந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்திய இவர் 8 போட்டிகளில் விளையாடி 17 இழப்புகளைக் கைப்பற்றினார். மேலும் மட்டையாட்டத்தில் 250 ஓட்டங்களையும் எடுத்தார். இதில் இரு அரை நூறு ஓட்டங்களும் அடங்கும். இதன்மூலம் தன்னை மட்டையாளராகவும் இந்தத் தொடரில் நிரூபணம் செய்தார்.

இந்தத் தொடரில் இவர் விளையாடிய 9 போட்டிகளில் நான்கு போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். இந்த போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இவரைத் தவிர்த்து ஜாக்கஸ் காலிசு மட்டுமே ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.

இங்கிலாந்து ,எட்ஜ்பஸ்டன் துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு 214 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 175 ஓட்டங்களுக்கு 6 இழப்புகளை தென்னாப்பிரிக்க அணி இழந்திருந்தது. இந்தப் போட்டியின் இறுதி ஓவரில் இவரும் ஆலன் டொனால்டும் களத்தில் இருந்தனர்.

போட்டியின் இறுதி நிறைவினை டேமியன் பிளம்மிங் வீசினார். முதல் இரு பந்துகளிலும் இவர் நான்கு ஓட்டங்களை எடுத்தார். பின்னர் நான்கு பந்துகளில் ஓர் ஓட்டம் எனும் நிலையில் இவர் மட்டையாடும் வாய்ப்பினைப் பெற்றார். மூன்றாவது பந்தில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் போனது. பின்னர் அடுத்த பந்தில் ஓட்டம் எடுக்க முற்பட்ட போது டொனால்டு ரன் அவுட் ஆனார். இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி வெற்றி பெற்றது.இருந்தபோதிலும் குளூசுனர் தொடர் நாயகன் விருது பெற்றார்.

ஒருநாள் துடுப்பாட்ட நூறுகள் தொகு

ஒருநாள் துடுப்பாட்ட நூறுகள்
வ எ ஓட்டங்கள் போட்டிகள் எதிரணி நகரம்/நாடு இடம் நாள் முடிவு
[1] 103* 49   நியூசிலாந்து   ஓக்லாந்து ஈடன் பார்க் 20 பெப்ரவரி1999 தோல்வி
[2] 101* 64   சிம்பாப்வே   நைரோபி ஜிம்கானா துடுப்பாட்ட அரங்க, 28 செப்டம்பர் 1999 வெற்றி

பயிற்சியாளராக தொகு

வங்காளதேசத் துடுப்பாட்ட வாரியம் தங்களது அணிக்கு குளூசுனர் பந்துவீச்சு பயிற்சியாளராக வர உள்ளார் எனத் தெரிவித்தது. ஆனால், இதனை இவர் மறுத்தார். 2010 ஆம் ஆண்டில் மீண்டும் வங்காளதேச வாரியம் அவரது பதிலுக்காக தாங்கள் காத்திருப்பதாக தெரிவித்தது. பின்னர் வங்காளதேச அணியின் பயிற்சியாளராக தன்னால் சேர இயலாது எனத் தெரிவித்தார். அதற்கு பிறகு அந்த அணிக்கு இலங்கைத் துடுப்பாட்ட வீரரான சம்பக்கா ராமநாயக ஒப்பந்தமாகினார். தனது மனைவி வங்காளதேசத்தில் இருப்பதற்கு இசைவு தெரிவிக்கவில்லை என இவர் கூறினார்.[5]

2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இவர் டால்பின்சு துடுப்பாட்ட அணிக்காக தலைமைப் பயிற்றுநராக இருந்தார். இவரின் துடுப்பாட்ட காலங்களில் இவர் அந்த அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடினார்.[6][7]

2016 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணியின் மட்டையாட்ட பயிற்சியாளராக ஒப்பந்தம் ஆனார். மேலும் இந்தியாவின் லைக்கா கோவை கிங்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார். [8]

2019 ஆம் ஆம்ண்டில் இவர் யூரோ இருபது20 போட்டித் தொடரின் அறிமுக ஆண்டில் கிளக்சோ ஜெயண்ட்சு அணியின் தலைமைப் பயிற்சியாளரக ஒப்பந்தம் ஆனார்.[9]

அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் ஆனார்.[10]

வெளியிணைப்புகள் தொகு

சான்றுகள் தொகு

  1. "2nd Test: India v South Africa at Kolkata, Nov 27 – Dec 1, 1996". espncricinfo. பார்க்கப்பட்ட நாள் 2011-12-13.
  2. Smith: Klusener can "ruin a team", Cricinfo, retrieved on 18 April 2009
  3. Klusener offers olive branch to Smith, Cricinfo, retrieved on 18 April 2009
  4. Klusener back in action, BBC Sport, retrieved on 18 April 2009
  5. http://www.espncricinfo.com/bangladesh/content/story/475554.html
  6. "Klusener shocked at Dolphins sacking". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 February 2016.
  7. Moonda, Firdose (25 January 2012). "Klusener appointed Dolphins interim coach". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. http://www.espncricinfo.com/southafrica/content/current/story/550918.html. பார்த்த நாள்: 25 January 2012. 
  8. "Klusener ropen in as coach by Koval Kings". Lanka Help Magazine. பார்க்கப்பட்ட நாள் 11 March 2017.
  9. "Eoin Morgan to represent Dublin franchise in inaugural Euro T20 Slam". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 July 2019.
  10. "Lance Klusener appointed Afghanistan's head coach". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லான்சு_குளுசுனர்&oldid=2900617" இலிருந்து மீள்விக்கப்பட்டது