லால்குடி ராஜலட்சுமி

லால்குடி ராஜலட்சுமி (Lalgudi Rajalakshmi) இந்திய பாரம்பரிய கருநாடக இசை வயலின் கலைஞர் ஆவார். ராஜலட்சுமி லால்குடி பாரம்பரியத்தில் வயலின் இசைக்கிறார்.

இளமையும் பயிற்சியும் தொகு

லால்குடி ராஜலட்சுமி இசைக்கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது உடன்பிறப்புகள் வீணை மேதை பத்மாவதி அனந்தகோபாலன் மற்றும் வயலின் கலைஞர்களான லால்குடி ஜெயராமன் மற்றும் சிறீமதி பிரம்மானந்தம் ஆவர். இவரது ஆரம்ப பயிற்சி இவரது தந்தை லால்குடி கோபாலா அய்யரிடம் இருந்தது. பின்னர் தனது மூத்த சகோதரர் லால்குடி ஜெயராமனிடமிருந்தும் கற்றுக்கொண்டார்.[1][2]

இசை செயல்பாடு தொகு

லால்குடி ராஜலட்சுமி தனது 10 வயதில் பாடத் தொடங்கினார். அப்போதிருந்து, அருணா சாயிராம், டி. கே. பட்டம்மாள், மண்டோலின் ஸ்ரீநிவாஸ், மணி கிருஷ்ணசுவாமி, எம். எல். வசந்தகுமாரி, நெய்வேலி சந்தனகோபாலன், என். ரமணி, ராதா மற்றும் ஜெயலட்சுமி, சரோஜா மற்றும் லலிதா, சுதா ரகுநாதன், இவரது மகள் ஜெயந்தி குமரேஷ் மற்றும் பேரன் அபிசேக் ரகுராம் உள்ளிட்ட பல கலைஞர்களுடன் இணைந்து வயலின் இசைத்துள்ளார். இந்தியாவிலும், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் இவர் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [3] ராஜலட்சுமி அனைத்திந்திய வானொலி பணியாளர் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

விருதுகள் தொகு

ராஜலட்சுமிக்கு வழங்கப்பட்ட விருதுகளில் சிறீ தியாகராஜ பஜன சபாவின் "கலா ஜோதி", இராமகிருஷ்ண பஜன சபையின் "சங்கீத பூஷணா", காயன சமாஜாவின் "ஸ்வரபூஷணி" (2013) மற்றும் இசை அகாடமியின் மதிப்புமிக்க பாப்பா வெங்கட்ரமையா விருது (2015) ஆகியவை அடங்கும்.[4]

கற்பித்தல் தொகு

மதிக்கப்படும் ஆசிரியராக, லால்குடி ராஜலட்சுமி மாணவர்களுக்கு வயலின், வீணா மற்றும் குரல் இசையில் பயிற்சி அளித்துள்ளார்.[5]  இவரது மாணவர்களில் வீணா கலைஞர் ஜெயந்தி குமரேஷ் குறிப்பிடத்தக்கவர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Legacy". www.lalgudirajalakshmi.com.
  2. Bhakthavatsalam, Sindhuja (July 2014). "My Guru. Lalgudi Rajalakshmi". Sruti Magazine: 34–36. 
  3. "The Artist". www.lalgudirajalakshmi.com.
  4. "Indian Heritage - December Madras (Chennai) Music Season - Awards 2014-2015". www.indian-heritage.org.
  5. "The Guru". www.lalgudirajalakshmi.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்குடி_ராஜலட்சுமி&oldid=3911542" இலிருந்து மீள்விக்கப்பட்டது