லீனா திவாரி

லீனா காந்தி திவாரி (Leena Gandhi Tiwari) (பிறப்பு 1956/1957) ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் எழுத்தாளர் ஆவார். [1] மும்பையைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு மருந்து மற்றும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான யு.எஸ்.வி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.[2] யு.எஸ்.வி அவரது தாத்தா விதல் பால்கிருஷ்ணா காந்தியால் 1961 இல் நிறுவப்பட்டது.[3] 2.6 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன், திகாரி இந்தியர்களில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகும், மேலும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் அடிக்கடி தோன்றும்.[4][5] இந்நிறுவனம் நீரிழிவு மற்றும் இருதய மருந்துகள் மற்றும் பயோசிமிலர் மருந்துகள், ஊசி மருந்துகள் மற்றும் செயலில் உள்ள மருந்து பொருட்கள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றது.

லீனா திவாரி
பிறப்பு1956/1957 (அகவை 67–68)
தேசியம்இந்தியர்
பணியு.எஸ்.வி பிரைவேட் லிமிடெட் தலைவர்
சொத்து மதிப்பு US$ 3.4 பில்லியன் (மே 2021)
பிள்ளைகள்2

திவாரி மும்பை பல்கலைக்கழகத்தில் தனது பி.காம் மற்றும் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுகலை செய்தார் .  இவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் பிரசாந்தை மணந்தார். இவர் மனிதாபிமானப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார் மற்றும் கல்விசார் அறிவுறுத்தல், நடனம் மற்றும் கணினிகள் மூலம் சிறுமிகளுக்கு வழிகாட்டும் வறிய பெண்களுக்கான டாக்டர் சுஷிலா காந்தி மையத்தை ஆதரிக்கிறார்.  2013 ஆம் ஆண்டில், திவாரி தனது தாத்தா விதல் காந்தி மீது, பியாண்ட் பைப்ஸ் அண்ட் ட்ரீம்ஸ் என்ற தலைப்பில் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை எழுதினார் .

இவர் 34 கோடி (5 மில்லியன் அமெரிக்க டாலர்) நன்கொடைக்காக ஹுருன் இந்தியா தொண்டு பட்டியலில் 2019 ஆம் ஆண்டில் 23 வது இடத்தைப் பிடித்தார். அதே பட்டியிலில் மகளிர் நன்கொடையாளர் பட்டியலில் 3 ஆம் இடத்தைப் பிடித்தார்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "Leena Gandhi Tiwari". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
  2. Phadnis, Aneesh (27 January 2018). "Diabetes drug major USV eyes niche therapies abroad, targets Rs 50 bn sales". Business Standard. https://www.business-standard.com/article/companies/diabetes-drug-major-usv-eyes-niche-therapies-abroad-targets-rs-50-bn-sales-118012600736_1.html. பார்த்த நாள்: 30 January 2019. 
  3. "Only four women in Forbes 100 richest Indians list". Hindustan Times. 24 September 2015. https://www.hindustantimes.com/business/only-four-women-in-forbes-100-richest-indians-list/story-flZ68fWFBkKybmGMx19yJP.html. பார்த்த நாள்: 30 January 2019. 
  4. "मिलिए भारत की सबसे अमीर महिलाओं से, इन बिजनेस वुमन ने मारी बाजी" (in Hindi). Navodaya Times. 3 September 2018. https://www.navodayatimes.in/news/khabre/these-are-indias-richest-women-these-women-businessmen-have-won/75875/. பார்த்த நாள்: 30 January 2019. 
  5. "Forbes 2015: Only 4 women among India's 100 richest". India Today. 24 September 2015. https://www.indiatoday.in/india/story/forbes-2015-only-4-women-among-indias-100-richest-264707-2015-09-24. பார்த்த நாள்: 30 January 2019. 
  6. "Only four women in Forbes 100 richest Indians list". Hindustan Times. 24 September 2015. https://www.hindustantimes.com/business/only-four-women-in-forbes-100-richest-indians-list/story-flZ68fWFBkKybmGMx19yJP.html. பார்த்த நாள்: 30 January 2019. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீனா_திவாரி&oldid=3946280" இலிருந்து மீள்விக்கப்பட்டது