லோலா மேவரிக் லாயிட்

அமெரிக்க அமைதிவாதி

லோலா மேவரிக் லாயிட் ( Lola Maverick Lloyd ) (நவம்பர் 24, 1875 – ஜூலை 25, 1944)[1] ஒரு அமெரிக்க அமைதிவாதியும், வாக்குரிமையாளரும், உலக கூட்டாட்சிவாதியும் பெண்ணியவாதியும் ஆவார். டெக்சஸில் பணக்கார மேவரிக் குடும்பத்தில் பிறந்த லோலா மேவரிக், பத்திரிகையாளர் ஹென்றி டெமரெஸ்ட் லாய்டின் மகனான வில்லியம் பிராஸ் லாய்டை மணந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக முற்போக்கு சகாப்தத்தின் காரணங்களை ஆதரிக்க தங்கள் குடும்பத்தின் செல்வாக்கையும் செல்வத்தையும் பயன்படுத்தினர்.

லோலா மேவரிக் லாயிட்
1915 களில் லோலா மேவரிக் லாயிட்
பிறப்பு(1875-11-24)நவம்பர் 24, 1875
காஸ்ட்ரோவில், டெக்சஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புசூலை 25, 1944(1944-07-25) (அகவை 68)
வின்னெட்கா, இல்லினாய்ஸ், அமெரிக்கா
பணிசமூக மற்றும் அரசியல் ஆர்வலர், எழுத்தாளர்

ஒரு பொது மற்றும் சர்ச்சைக்குரிய விவாகரத்தைத் தொடர்ந்து, லோலா மேவரிக் லாயிட் சமாதானத்தை ஆதரிப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். இவர் 1915 இல் அமைதி மற்றும் சுதந்திரத்திற்கான பெண்களின் அமைதிக் கட்சி மற்றும் மகளிர் சர்வதேச அமைப்பை நிறுவ பணியாற்றினார். தனது நெருங்கிய தோழியான ரோசிகா ஸ்விம்மருடன் . இணைந்து 1937 இல் உலக அரசாங்கத்திற்கான பிரச்சாரத்தை நிறுவினார். இது உலக அரசாங்கம் மற்றும் உலக கூட்டாட்சிக்கான முதல் நிறுவன முயற்சியாகும்.

அமைதிக்கான காரணங்கள் தொகு

முதலாம் உலகப் போர் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, அங்கேரிய அமைதிவாதியான ரோசிகா சுவிம்மரின் தொடர்பு கிடைத்தது. போருக்கு அமைதியான தீர்வு காண்பதில் அமெரிக்க நலன்களை அதிகரிக்கும் முயற்சியில் சுவிம்மர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். லாயிட் சுவிம்மரைப் பின்தொடர்ந்து மேலும் பல நிகழ்வுகளுக்குச் சென்றார். ஜனவரி 1915 இல் வாஷிங்டன், டிசியில் பெண் அமைதிக் கட்சியை நிறுவிய பிரதிநிதிகளில் இவரும் ஒருவர். லோலா பின்னர் டென் ஹாக்க்கில் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டிற்காக சென்ற நாற்பத்தேழு பெண்களுடன் ஐரோப்பாவிற்கு பயணம் செய்தார். மாநாட்டுக்குப் பிறகு, ஹென்றி ஃபோர்டின் அமைதிக் கப்பலை ஒழுங்கமைக்க உதவுவதற்காக இவர் சிக்காகோவுக்குத் திரும்பினார். ஆனாலும் இதுபோரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு சமாதான மாநாட்டை கட்டாயப்படுத்துவதற்கான ஒரு தோல்வியுற்ற முயற்சியானது. தொடர்ச்சியான மத்தியஸ்தத்திற்கான நடுநிலை மாநாட்டை மேற்பார்வையிடும் "ஏழு குழுவின்" உறுப்பினராகவும் இருந்தார்.

இறப்பு தொகு

1939 வாக்கில், ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்ட லோலா லாய்டின் உடல்நிலை மோசமானது. மேலும் கணையப் புற்றுநோயால் ஏற்பட்ட சிக்கல்களால் ஜூலை 25, 1944 அன்று தனது 68வது வயதில் இறந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோலா_மேவரிக்_லாயிட்&oldid=3681726" இலிருந்து மீள்விக்கப்பட்டது