வக்கான் மாவட்டம்

வக்கான் மாவட்டம் (Wakhan District) ஆப்கானித்தான் நாட்டின் படாக்சான் மாகாணத்தின் 28 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ஆப்கானித்தானின் கிழக்கில், பாமிர் மலையில் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வக்கான் தாழ்வாரத்தில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 16,873 மட்டுமே. இம்மாவட்டத்தின் தலைமையிட நகரம் கான்தூத் நகரம் ஆகும். இம்மாவட்டம் 112 மலைக் கிராமங்களைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் கிர்கிஷ் பழங்குடி இசுலாமிய மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 11,258 சதுர கிலோ மீட்டர் (4,347 சதுர மைல்) ஆகும்.

வக்கான்
واخان (in Pashto and பாரசீக மொழி) ·
Вахон (in தாஜிக் மொழி)
மாவட்டம்
பாமிர் மலையின் தெற்கில் வக்கான் நகரத்தின் காட்சி
பாமிர் மலையின் தெற்கில் வக்கான் நகரத்தின் காட்சி
ஆப்கானித்தான் நாட்டின் தூரக்கிழக்கில் படாக்சான் மாகாணத்தில் வக்கான் மாவட்டத்தின் அமைவிடம்
ஆப்கானித்தான் நாட்டின் தூரக்கிழக்கில் படாக்சான் மாகாணத்தில் வக்கான் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 37°07′45″N 73°37′07″E / 37.129240°N 73.618680°E / 37.129240; 73.618680
நாடுஆப்கானித்தான்
மாகாணம்படாக்சான்
கிராமங்கள்112
தலைமையிடம்கான்தூத்
அரசு
 • ஆளுநர்நசரத்துல்லா நயில்
பரப்பளவு
 • மொத்தம்11,258 km2 (4,347 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்16,873

இம்மாவட்டம் 3 நாடுகளின் பன்னாட்டு எல்லைகளை பகிர்ந்துள்ளது. அவைகள்: வடக்கில் தஜிகிஸ்தான், தெற்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள கில்ஜித்-பல்டிஸ்தான், கிழக்கில் சீனாவின் சிஞ்சியாங் மாகாணம் ஆகும்.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  • Map at the Afghanistan Information Management Services
"https://ta.wikipedia.org/w/index.php?title=வக்கான்_மாவட்டம்&oldid=3246748" இலிருந்து மீள்விக்கப்பட்டது