வக்பு வாரியக் கல்லூரி

மதுரையில் செயல்படும் முசுலீம் சிறுபான்மை கலை அறிவியல் கல்லூரி

முகையத் ஷா சிர்குரோ வக்பு வாரியக் கல்லூரி (MSS Wakf Board College) என்பது மதுரை மாநகரில் உள்ள ஒரு சிறுபான்மைக் கல்வி நிறுவனம் ஆகும். இது இந்தியாவில் வக்பு வாரியத்தால் 1964ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் ஒரே ஒரு கல்லூரியாகும். மதுரையின் பழமையான மற்றும் முதல் முசுலிம் கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் அரசு உதவி பெறும் பிரிவில் 8 இளநிலை, இரண்டு முதுநிலை மற்றும் ஒரு ஆய்வு நிறைஞர் படிப்பும், சுயநிதிப் பிரிவில் 5 இளநிலை, இரண்டு முதுநிலை மற்றும் ஒரு முதுநிலைப் பட்டயம் மற்றும் கணினிப் பயன்பாடு பட்டயப் படிப்பும் நடத்தப்படுகிறது.

முகையத் ஷா சிர்குரோ வக்பு வாரியக் கல்லூரி
குறிக்கோளுரை"அறிவே ஒளி மற்றும் ஒழுக்கம்"
வகைதமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் கல்லூரி
உருவாக்கம்1964
தலைவர்ஜனாப் எஃப். அப்துல் ராசிக்
கல்வி பணியாளர்
74
நிருவாகப் பணியாளர்
46
மாணவர்கள்1341
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புயூஜிசி, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.msswbc.org/

அரசு உதவி பெறும் படிப்புகள் தொகு

இளங்கலை தொகு

  • இளங்கலை வரலாறு
  • இளங்கலை பொருளாதாரம் (ஆங்கிலம் & தமிழ் ஊடகம்)
  • இளங்கலை அறிவியல் இயற்பியல்,
  • இளங்கலை கணிதம்
  • இளங்கலை அறிவியல் வேதியியல்
  • இளங்கலை அறிவியல் விலங்கியல்
  • இளங்கலை வணிகவியல்

முதுகலை தொகு

  • முதுகலை ஆங்கில இலக்கியம்
  • முதுகலை வணிகவியல்

சுயநிதி படிப்புகள் தொகு

இளங்கலை தொகு

  • இளங்கலை தமிழ்
  • இளங்கலை ஆங்கிலம்
  • இளங்கலை கணினி அறிவியல்
  • இளங்கலை மின்னணுவியல்
  • இளங்கலை வணிகவியல் (கணினி பயன்பாட்டுடன் வணிகம்)
  • இளங்கலை வியாபார நிர்வாகம்
  • இளங்கலை கணினி பயன்பாடு (பி.சி.ஏ)

முதுகலை தொகு

  • முதுகலை கணினி அறிவியல்
  • முதுகலை தகவல் தொழில்நுட்பம் & மேலாண்மை (IT & M)
  • முதுகலை வணிகவியல்

பட்டயப்படிப்பு தொகு

  • முதுகலை பட்டயப்படிப்பு (ஒரு வருடம்): கணினி பயன்பாடுகள் (PGDCA)
  • பட்டயப்படிப்பு (ஒரு வருடம்): கணினி பயன்பாடுகள் (DCA)

முதுநிலை ஆய்வாளர் தொகு

  • முதுநிலை ஆய்வாளர் - வணிகவியல்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வக்பு_வாரியக்_கல்லூரி&oldid=3634181" இலிருந்து மீள்விக்கப்பட்டது