வசீலி அலெக்செயெவ்

வசீலி அலெக்செயெவ் (உருசியன்: Василий Иванович Алексеев; 7 சனவரி 1942 – 25 நவம்பர் 2011) என்பவர் சோவியத் ஒன்றியத்தின் பளு தூக்கும் வீரர். இவர் 80 உலக சாதனைகளையும் 81 சோவியத் ஒன்றிய சாதனைகளையும் புரிந்தார். ஒலிம்பிக் போட்டியில் 1972 ஆம் ஆண்டும் 1976 ஆம் ஆண்டும் தங்கம் வென்றார்.

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

18 வயதாக இருக்கும் போது டிருட் தன்னார்வலர் விளையாட்டு மையத்தில் பளு தூக்கும் பயற்சியை பயிற்சியாளர் ருடோல்ப் பிலைபில்டர் மூலம் தொடங்கி, 1968 வரை பயிற்சியை அங்கு தொடர்ந்தார். 1968 ஆம் ஆண்டிலிருந்து பயிற்சியை தனியாக எந்த பயிற்சியாளரும் இன்றி செய்தார். இவர் மற்ற பெரும் பளு தூக்குபவர்கள் போல் பெரிய உடம்பு உடையவர் அல்ல அதனால் உடம்பில் எடையை கூட்ட ஊக்குவிக்கப்பட்டார். 1970 சனவரி அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தின் கொலம்பசு நகரில் உலக பளுதூக்குவோர் போட்டியில் தன் முதல் உலக சாதனையை புரிந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசீலி_அலெக்செயெவ்&oldid=3443090" இலிருந்து மீள்விக்கப்பட்டது