வடமதுரை

வடமதுரை யின் பழைய பெயர் என்ன தெரிவிக்க வேண்டும்

வடமதுரை (ஆங்கிலம்:Vadamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வடமதுரை பேரூராட்சி திண்டுக்கல் - திருச்சி செல்லும் சாலையில், திண்டுக்கல்லிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 18,010 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 25.90 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]. வடமதுரைப் பேரூராட்சியின் தலைவராக திருமதி. நிருபாராணி கணேசன் 2022 முதல் செயல்பட்டு வருகிறார்.

புவியியல் தொகு

இவ்வூரின் அமைவிடம் 10°28′N 78°05′E / 10.47°N 78.08°E / 10.47; 78.08 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275 மீட்டர் (902 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,533 வீடுகளும், 18,015 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,434 மற்றும் 0 ஆகவுள்ளனர்.[3]

ஆதாரங்கள் தொகு

  1. வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்
  2. "Vadamadurai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. Vadamadurai Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=வடமதுரை&oldid=3706649" இலிருந்து மீள்விக்கப்பட்டது