வண்டறாவு (Vandaravu, மலையாளம்: വണ്ടറാവു) இந்தியாவின் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பழனி மலைகள் பகுதியிலுள்ள உயர்ந்த சிகரமாகும்.[1] இது இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் வட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்திற்கும் இடையிலான எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. இது பழனி குன்றின் மேற்கு விளிம்பில் பாம்பாடும் சோலை தேசியப் பூங்காவின் (இடுக்கி) எல்லையாக அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,533 மீ உயரத்தில் உள்ள இது திண்டுக்கல் மாவட்டத்தின் மிக உயரமான இடமாகும். இந்த சிகரம் மலையேற்றத்திற்கு அருமையான இடமாகும். இந்த சிகரத்தினைச் சுற்றியுள்ள பெரும் பகுதிகளில் காடுகள் அமைந்துள்ளன. இதில் வனவிலங்குகளை அடிக்கடி காணலாம். மூணாறு மேல் நிலையத்திலிருந்து கொடைக்கானலுக்குச் செல்லும் சாலை உள்ளது. இது மிகவும் பழமையான மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள வாகனம் செல்லும் சாலையாகும். உள்ளது. இந்த இடத்திற்கு மூணாற்றிலிருந்து நாம் மகிழ்வுந்தில் பயணிக்கலாம்.[2]

வண்டறாவில் உள்ள கண்காணிப்பு கோபுரம்

இதன் அருகில் உள்ள மற்ற முக்கிய சிகரங்கள் வெம்பாடி சோலை (2,505 மீ) மற்றும் கருங்காடு (2,150 மீ).

மேற்கோள்கள் தொகு

  1. https://www.britannica.com/place/Vandaravu
  2. "Top 10 Highest Peaks In South India - Vandaravu Peak" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-20. Archived from the original on 2020-10-08. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டறாவு&oldid=3578648" இலிருந்து மீள்விக்கப்பட்டது