வனுவாட்டு (Vanuatu, English: /ˌvɑːnˈɑːt/ (கேட்க), பிசுலாமா: Vanuatu), அல்லது வனுவாட்டு குடியரசு (Republic of Vanuatu) என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். எரிமலைகளைக் கொண்டுள்ள இத்தீவுக்கூட்டம், ஆத்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ (1090 மைல்) கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ (310மைல்) வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

வனுவாட்டு குடியரசு
Republic of Vanuatu
கொடி of வனுவாட்டு
கொடி
Coat of arms of வனுவாட்டு
Coat of arms
குறிக்கோள்: "Long God yumi stanap" (பிசுலாமா மொழி)
"கடவுளினுள் நாம் நிற்கிறோம்"[1][2][3]
நாட்டுப்பண்: Yumi, Yumi, Yumi (பிசுலாமா மொழி)
நாம், நாம், நாம்
வனுவாட்டுஅமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
போர்ட் விலா
ஆட்சி மொழி(கள்)
இனக் குழுகள்
(1999)
மக்கள்நி-வனுவாட்டு
அரசாங்கம்ஒற்றையாட்சி நாடாளுமன்ற குடியரசு
• குடியரசுத்தலைவர்
பால்டுவின் லோன்சுடேல்
• பிரதமர்
ஜோ நட்டுமேன்
சட்டமன்றம்நாடாளுமன்றம்
விடுதலை
• பிரான்சு, மற்றும் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
30 சூலை 1980
பரப்பு
• மொத்தம்
12,190 km2 (4,710 sq mi) (161வது)
மக்கள் தொகை
• சூலை 2014[5] மதிப்பிடு
266,937
• 2009 கணக்கெடுப்பு
243,304[4]
• அடர்த்தி
19.7/km2 (51.0/sq mi) (188வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2011 மதிப்பீடு
• மொத்தம்
$1.204 பில்லியன்[6]
• தலைவிகிதம்
$4,916[6]
மொ.உ.உ. (பெயரளவு)2011 மதிப்பீடு
• மொத்தம்
$743 மில்லியன்[6]
• தலைவிகிதம்
$3,036[6]
மமேசு (2013) 0.616[7]
மத்திமம் · 131வது
நாணயம்வனுவாட்டு வாட்டு (VUV)
நேர வலயம்ஒ.அ.நே+11 (VUT (வனுவாட்டு நேரம்))
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+678
ஐ.எசு.ஓ 3166 குறியீடுVU
இணையக் குறி.vu

வனுவாட்டுவில் முதலில் மெலனீசிய மக்கள் வாழ்ந்து வந்தனர். 1606 ஆம் ஆண்டில் போர்த்துக்கீச மாலுமி பெர்னான்டசு டி குயிரோசு என்பவரின் தலைமையில் எசுப்பானியக் கப்பல் இங்கு முதன் முதலில் ஐரோப்பாவில் இருந்து எஸ்பிரித்து சான்டோ என்ற மிகப் பெரிய தீவில் தரையிறங்கியது. இத்தீவுக்கூட்டத்தை குடியேற்றக்கால எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் ஒரு பகுதியாக அறிவித்து, இதற்கு "ஆத்திரேலியா டெல் எஸ்பிரித்து சான்டோ" (Austrialia del Espiritu Santo) எனப் பெயரிட்டார்.

1880களில், பிரான்சும், ஐக்கிய இராச்சியமும் இத்தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியை தமது பகுதிகளாக அறிவித்தன. 1906 ஆம் ஆண்டில் இத்தீவுக்கூட்டத்தை பிரித்தானிய-பிரெஞ்சு கூட்டுரிமை மூலம் "நியூ எபிரைட்சு" (New Hebrides) என்ற பெயரில் நிருவகிக்க உடன்பட்டன. 1970களில் நாட்டில் விடுதலைக்கான இயக்கம் வலுப்பெற்று 1980 ஆம் ஆண்டில் இத்தீவுக்கூட்டம் வனுவாட்டு குடியரசு என்ற பெயரில் விடுதலை அடைந்தது.

சொற்பிறப்பு தொகு

பல ஆத்திரோனேசிய மொழிகளில் நிலம் அல்லது வீட்டைக் குறிக்கும் "வனுவா"[8] என்னும் சொல்லில் இருந்தும், நில் என்பதைக் குறிக்கும் டு என்ற சொல்லில் இருந்தும்[9][9] வனுவாட்டு என்ற பெயர் பிறந்தது.[10]

புவியியல் தொகு

 
வனுவாட்டுவின் நிலவரை

வனுவாட்டு எரிமலை விளைபொருட்களாகத் தோன்றிய சுமார் 82 சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு Y-வடிவத் தீவுக் கூட்டம் ஆகும். இவற்றில் 65 மக்களற்ற தீவுகள் ஆகும். வட, த்னெ முனைத் தீவுகளுக்கிடையேயான தூரம் கிட்டத்தட்ட 1,300 கிமீ (810 மைல்) ஆகும்.[11] இரண்டு தீவுகள் (மெத்தியூ மற்றும் ஹன்டர் தீவுகள்) பிரான்சினால் நியூ கலிடோனியாவின் கூட்டிணைவில் நிருவகிக்கப்படுகிறது.

போர்ட் விலா வனுவாட்டுவின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது எஃபாட்டே தீவில் உள்ளது. அதற்கடுத்த பெரிய நகரம் லூகன்வில் எஸ்பிரித்து சான்டோ தீவில் உள்ளது.[12] வனுவாட்டுவின் அதியுயர் புள்ளி எஸ்பிரித்து சான்டோவில் உள்ள தப்வெமசானா மலை ஆகும். இதன் உயரம் 1,879 மீ (6,165 அடி) ஆகும்.

வனுவாட்டுவின் மொத்தப் பரப்பளவு கிட்டத்தட்ட 12,274 சதுரகிமீ (4,739 சது.மைல்),[13] இவற்றில் நிலப்பரப்பு கிட்டத்தட்ட 4,700 சதுரகிமீ (1,800 சதுரமைல்) ஆகும். பெரும்பாலான தீவுகள் செங்குத்தானவையாகவும், திரமற்ற மணலையும் கொண்டுள்ளன, நன்னீர் மிகக்குறைந்தளவே உள்ளன.[11] வனுவாட்டுவின் 9% நிலப்பகுதியே வேளாண்மைக்கு உகந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது.[14]

வனுவாட்டுவில் பெருமளவு செயல்நிலை எரிமலைகள் காணப்படுகின்றன. பல கடலடி எரிமலைகளும் உள்ளன. 2008 நவம்பரில் 6.4 அளவு கடலடி எரிமலை வெடிப்பு இடம்பெற்றது. ஆனாலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. 1945 இலும் எரிமலை வெடிப்பு இடம்பெற்றது.[15]

மேற்கோள்கள் தொகு

  1. Selmen, Harrison (17 July 2011). "Santo chiefs concerned over slow pace of development in Sanma". Vanuatu Daily Post. பார்க்கப்பட்ட நாள் 29 August 2011.
  2. John Lynch and Fa'afo Pat (eds), Proceedings of the first International Conference on Oceanic Linguistics, Australian National University, 1993, p. 319.
  3. G. W. Trompf, The Gospel Is Not Western: Black Theologies from the Southwest Pacific, Orbis Books, 1987, p. 184.
  4. (PDF) 2009 Census Household Listing Counts. Vanuatu National Statistics Office. 2009 இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101205053216/http://www.spc.int/prism/country/vu/stats/P_releases/Adhoc/HH%20listing%20count%20release%20-%20071009.pdf. பார்த்த நாள்: 6 சனவரி 2010. 
  5. நடுவண் ஒற்று முகமை. "Vanuatu". த வேர்ல்டு ஃபக்ட்புக். Archived from the original on 15 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 6 January 2010.
  6. 6.0 6.1 6.2 6.3 "Vanuatu". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 22 April 2012.
  7. "2014 Human Development Report Summary" (PDF). United Nations Development Programme. 2014. pp. 21–25. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.
  8. Vanua in turns comes from the Proto-Austronesian banua – see Thomas Anton Reuter, Custodians of the Sacred Mountains: Culture and Society in the Highlands of Bali, University of Hawaii Press, 2002, p. 29; and Thomas Anton Reuter, Sharing the Earth, Dividing the Land: Land and Territory in the Austronesian World, ANU E Press, 2006, p. 326.
  9. 9.0 9.1 Crowley, Terry (2004). Bislama reference grammar. University of Hawaii Press. பக். 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-2880-6. http://books.google.com/books?id=V7Td_VMSh9gC&pg=PA3. 
  10. Hess, Sabine C. (சூலை 2009). Person and Place: Ideas, Ideals and the Practice of Sociality on Vanua Lava, Vanuatu. Berghahn Books. பக். 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84545-599-6. http://books.google.com/books?id=hY80OTx2KuMC&pg=PA115. 
  11. 11.0 11.1 The Peace Corps Welcomes You to Vanuatu. Peace Corps (மே 2007).
  12. "Background Note: Vanuatu". Bureau of East Asian and Pacific Affairs. U.S. Department of State. ஏப்ரல் 2007. பார்க்கப்பட்ட நாள் 16 சூலை 2007. {{cite web}}: Check date values in: |date= (help)
  13. "Oceania – Vanuatu Summary". SEDAC Socioeconomic Data and Applications Centre. 2000. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2009.
  14. "Water, Sanitation and Hygiene (Pacific Islands Applied Geoscience Commission)". SOPAC. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2009.
  15. "Major Earthquake Jolts Island Nation Vanuatu". indiaserver.com. 11 சூலை 2008. Archived from the original on 2011-07-13. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2009.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வனுவாட்டு&oldid=3571091" இலிருந்து மீள்விக்கப்பட்டது