வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்பது இந்தியாவில் பட்டியல் இன மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுத் தரு‍வதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.[2][3]

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்
சான்றுOfficial Act
இயற்றியதுஇந்திய நாடாளுமன்றம்
சட்ட திருத்தங்கள்
23 டிசம்பர் 2011[1]
சுருக்கம்
பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம்
முக்கிய சொற்கள்
பட்டியல் இன மக்கள்

இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976 இல் அது பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் பட்டியலின மக்களுககு மட்டுமே பொருந்தும். பழங்குடியினருக்குப் பொருந்தவில்லை. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், இளைய பெருமாள் என்பவரது தலைமையில் ஒரு கமிட்டியை பாராளுமன்றம் அமைத்தது. அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மிகத் தாமதமாக 1995ல் தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கே வந்தது.[4]

பழங்குடியினர் மீது காவல்துறை மற்றும் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் பலாத்காரம் தொடர்பான புகார்கள் அதிகரித்தபோது இந்தச் சட்டம் உருவானது. இந்தச் சட்டத்தைக் காவல்துறையினர் தங்களுக்கு எதிரானதாகவே நினைத்தனர். இதனால் இந்தச் சட்டமும் முறையாகப் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.[5]

சட்டத்தின் விதிகள் தொகு

கீழ்க்காணும் செயல்களுக்கு‍ இச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்

  • பஞ்சமி நிலங்களை பிற சமூகத்தவர் ஆக்கிரமித்தல்[6]
  • தேனீர் விடுதிகளில் இரட்டை டம்ளர்(glass) முறை மேற்கொள்தல்.
  • குறிப்பிட்ட சாதி பெயரைச் சொல்லி சுட்டிக்காட்டி பேசுதல்.

மேற்கோள்கள் தொகு

  1. "Rules amended, compensation enhanced" (PDF). Archived from the original (PDF) on 2013-11-07. பார்க்கப்பட்ட நாள் 2013-09-21.
  2. பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம் 1989 மற்றும் விதிகள், 1995
  3. http://socialjustice.nic.in/poa-rule.php?pageid=1
  4. கே.கே, மகேஷ் (18 ஏப்ரல்), "தலித் படுகொலைகள் அதிகம்", விகடன், pp. செய்திகள், archived from the original on 2013-04-22, பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2013 {{citation}}: Check date values in: |date= and |year= / |date= mismatch (help)
  5. "அரசியல்தான் தெரிகிறது!", தினமணி, சென்னை, pp. தலையங்கம், 29 சூன் 2011, archived from the original on 29 சூன் 2011, பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2013 {{citation}}: |first= missing |last= (help)
  6. தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்புச்) சட்டம். 1989. மற்றும் விதிகள்.1995.

வெளி இணைப்புகள் தொகு