வரிச் சிலந்திபிடிப்பான்

தடித்த அலகு சிலந்திபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
அரக்னோதீரா
இனம்:
அ. கிராசிரோசுரிசு
இருசொற் பெயரீடு
அராக்னோதெரா கிராசிரோசுரிசு
கோட்ஜ்சன், 1837

வரிச் சிலந்திபிடிப்பான் (Streaked spiderhunter)(அராக்னோதெரா மாக்னா) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஓர் பறவை சிற்றினமாகும்.

விளக்கம் தொகு

இது சிட்டுக்குருவியின் அளவில் காணப்படும்.[2] இது ஆலிவ் மஞ்சள் நிறத்தில், பல இருண்ட வரிகளுடன் காணப்படும். இது நீண்ட, வளைந்த கருப்பு அலகினையும் மற்றும் மஞ்சள் நிறக் கால்களையும் கொண்டுள்ளது. உடலின் அடிப்பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் கறுப்பு நிற கோடுகளுடன் உள்ளது. இதன் அலகின் அமைப்பு மகரந்தத்தினை உண்ணும் வகையில் சிறப்பான மாற்றத்துடன் அமைந்துள்ளது.[2][3]

பரவல் மற்றும் வாழிடம் தொகு

இது வங்காளதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில், இது கிழக்கு இந்திய மாநிலங்களில் காணப்படுகிறது.[2] இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மலைக் காடுகள் ஆகும் .

நடத்தை தொகு

வரிச் சிலந்திபிடிப்பான் தனியாகவோ அல்லது இணையாகவோ காணப்படும். மார்ச் முதல் ஜூலை வரை கூடு கட்டும் காலமாகும். கூடு பொதுவாகச் சிலந்தி வலைகளுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட இலைகளால் ஆனது. மேலும் இவை இலையின் பின்புறத்தில் இணைக்கப்பட்டிருக்கும்.[2]

உணவு தொகு

இது காட்டு வாழைப்பூ போன்ற பூக்களில் பூந்தேனை உண்ணும்.[3]

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Arachnothera magna". IUCN Red List of Threatened Species 2016: e.T22718128A94568754. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718128A94568754.en. https://www.iucnredlist.org/species/22718128/94568754. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 Ali, Salim (1996). The Book of Indian Birds. India: Oxford University Press. p. 299.
  3. 3.0 3.1 Grewal, Bikram (2000). Birds of the Indian Subcontinent. India: Local Colour Limited. p. 137.

வெளி இணைப்புகள் தொகு

  •   பொதுவகத்தில் Arachnothera magna பற்றிய ஊடகங்கள்
  •   விக்கியினங்களில் Arachnothera magna பற்றிய தரவுகள்