வலம்புரி அ. பாலசுப்பிரமணியம்

வலம்புரி அ. பாலசுப்பிரமணியப் பிள்ளை (இறப்பு: 1933) தமிழகத் தமிழறிஞர் ஆவார்.

பிறப்பும் இளமையும் தொகு

தஞ்சாவூரில் வெண்ணாற்றங்கரைக்கு அண்மையில் உள்ள வலம்புரி எனும் ஊரில் பிறந்தவர் அ. பாலசுப்பிரமணியப்பிள்ளை. இவர் பெற்றோர் அண்ணாசாமி பிள்ளை - சுந்தரத்தம்மாள். தொடக்கக் கல்வியை அன்னப்பன் பேட்டைத் திருமடத்துச் சுவாமிகளிடம் கற்றார். இளமையிலேயே தமிழில் மிகுந்த புலமைப் பெற்றிருந்தார்.

ஆசிரியர் பணி தொகு

கணிதமேதை இராமானுஜம் உள்ளிட்ட பெருமை மிக்கோர் பலர் பயின்ற குடந்தை நகர மேனிலைப் பள்ளியி்ல் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் பாலசுப்பிரமணியம். ஒரு பணியிடத்திற்குப் பல பேர் விண்ணப்பத்ததால் போட்டித் தேர்வு நடத்தப் பெற்றது. கடினமான அத்தேர்வில் இரண்டு பேர் சம மதிப்பெண்கள் பெற்று முன்னிலைப் பெற்றனர். ஒருவர் பின்னத்தூர் நாராயணசாமி, மற்றொருவர் அ. பாலசுப்பிரமணியம்.

தமிழ்ப் பணி தொகு

வை. கோவிந்தசாமிப் பிள்ளை என்பவர் யதார்த்த வசனீ எனும் இதழை நடத்தினார். அதில் பிள்ளையவர்கள் தொடர்ந்து அரிய பல கட்டுரைகள் எழுதினார். தி. வை. சதாசிவப் பண்டாரத்தாருடன் சேர்ந்து 'பன்னிரு திருமுறை ஆசிரியர் வரலாறு' என்ற நூலை எழுதினார். குப்புசாமி ராஜீ என்பவர் வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த 'தருக்க கௌமுகி' என்ற நூலுக்கு இவர் முகவுரை எழுதியுள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கம் உருவானதற்குக் காரணமாக இருந்தவர்கள் பதின்மர். அவர்களுள் ஒருவர் அ. பாலசுப்பிரமணியம்.

மறைவு தொகு

1899 முதல் 1932 வரை 33 ஆண்டுகள் தமிழாசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றிய இவர் 1933 ஆம் ஆண்டு காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  • இரா. சின்னதம்பியின் கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்ற நூல்
  • .தி.வை.சதாசிவப் பண்டாரத்தாரின்' வழுக்கி வீழினும்' எனும் கட்டுரை -1957
  • முனைவர் அ. ம. சத்தியமூர்த்தி ' தமிழுலகம் நினைக்க மறந்த தமிழர்கள்'