வலைவாசல்:அறிவியல்


தொகு  

அறிவியல் வலைவாசல்


அறிவியல் என்பது பொதுவாக அறிவின் அடிப்படையில் ஏதொன்றையும் முறைப்படி அணுகி யாரும் சரிபார்த்து உறுதி செய்யும் வண்ணம் உண்மைகளைக் கண்டு நிறுவப்பெறும் அறிவுத்துறையாகும். இது பெரும்பாலும் இரு பெரும் பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. இயற்கையில் உள்ள புறபொருட்களின் அமைப்பு மற்றும் இயக்கங்கள் பற்றியதை, இயற்கைப்பொருள் அறிவியல் என்றும், மக்கள் குழுமங்கள், வாழ்க்கை, அரசியல், மொழியியல் முதலியன குமுக அறிவியல் அல்லது சமூக அறிவியல் என்றும் பிரிக்கப்படுகின்றது. அறிவியலை அடிப்படைத் தூய அல்லது தனி அறிவியல் என்றும் பயன்பாட்டு அல்லது பயன்முக அறிவியல் என்றும் பிரிப்பதும் உண்டு. கணிதவியலை இயற்கைப்பொருள் அறிவியலில் ஒரு உட்துறையாகக் கருதுவோரும் உண்டு, அதனைத் தனியானதொரு அடிப்படை அறிவியல் துறையாகக் கொள்வாரும் உண்டு.


தொகு  

சிறப்புக் கட்டுரை


மின்காந்தம் என்பது மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் ஆகும். இதில் மின்னோட்டம் நிறுத்தப்படும்போது காந்தப்புலம் மறைந்துவிடும். தானியங்கிகள், மின்பிறப்பாக்கிகள், அஞ்சல் சுற்றுக்கள், ஒலிபெருக்கிகள், வன்வட்டுக்கள், காந்தப் பரிவுப் படிமவாக்கல் இயந்திரங்கள், அறிவியல் கருவிகள், காந்தவியல் பிரித்தெடுப்பு சாதனங்கள் போன்ற மின் சாதனங்களில் மின்காந்தங்கள் ஒரு துணை அங்கமாகவும் கைத்தொழிற் துறையில் அதிக எடை கொண்ட இரும்புப் பாளங்களைத் தூக்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது. கம்பியொன்றில் பாயும் மின்னோட்டமானது அக்கம்பியைச் சுற்றி காந்தப்புலமொன்றை உருவாக்குகிறது. காந்தப்புலத்தை ஒருமுகப்படுத்துவதற்காக மின்காந்தமொன்றில் கம்பியானது முறுக்குகள் மிகவும் அருகருகே இருக்கும் வகையில் ஒரு சுருளாகச் சுற்றப்பட்டிருக்கும்.
தொகு  

சிறப்புப் படம்


படிம உதவி: Alchemist-hp

பிளாட்டினம் ஒரு வேதியியல் தனிமம். இதனைத் தகடாகவும் கம்பியாகவும் மாற்றலாம். பளபளப்பேறும் வெண் சாம்பல் நிறமுடைய எடைமிகுந்த உலோகம். தங்கம் போலவே விலை உயர்ந்த நகை அணிகள் செய்யவும் மின் கருவிகளில் உறுதியான மின்னிணைப்புதரும் மின் முனைகளாகவும் தானுந்துகளில் இருந்து வெளியேறும் வாயுக்களிலுள்ள சூழலுக்குக் கேடு தரும் கார்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்களின் நச்சுத்தன்மையைக் குறைக்கவும் இது பயன்படுகின்றது. படத்தில் உருக்கித் திண்மமாக்கப்பட்ட பிளாட்டினம் காட்டப்பட்டுள்ளது.

தொகு  

செய்திகளில் அறிவியல்



தொகு  

அறிவியலாளர்கள்‎


கரோலஸ் லின்னேயஸ் (1707-1778) சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும், பெயர்முறைக்கும் அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். திணை, வகுப்பு, வரிசை, பேரினம், இனம் என படிநிலைகள் இவரது வகைப்பாட்டில் அமைந்திருந்தன. திணைகள் மேலும் தாவரங்கள்), விலங்குகள் என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தன. இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன.
தொகு  

உங்களுக்குத் தெரியுமா...


  • ... 1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான சோசப்பு பிரீசிட்லி ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.
  • ... ஆல்பா ஔரிகா (காபெல்லா) விண்மீன் ஆறாவது மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய இரட்டை விண்மீன்கள் ஆகும்.
  • ... கிளீசு 581 ஜி புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்.
  • ... தொடுதிரை என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும்.
தொகு  

இதே மாதத்தில்

தொகு  

பகுப்புகள்


அறிவியல் பகுப்புகள்

தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • அறிவியல் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|அறிவியல்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • அறிவியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • அறிவியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • அறிவியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • அறிவியல் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

விக்கித்திட்டங்கள்

தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


கணிதம்‎ கணினியியல் தொழினுட்பம் உயிரியல்

மின்னணுவியல்‎ மருத்துவம் புவியியல் வானியல்
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:அறிவியல்&oldid=3612441" இலிருந்து மீள்விக்கப்பட்டது