வலைவாசல்:திரைப்படம்/Selected picture/1

நேரம், நகைச்சுவை மற்றும் பரபரப்பு பாணியில் அல்போன்சு புத்திரன் இயக்கி, 2013இல் வெளிவந்த தென்னிந்தியத் திரைப்படம் ஆகும். இது ஒரே நேரத்தில் தமிழிலும், மலையாளத்திலும் படமாக்கப்பட்டது. இதில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா, நாசர், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படமே நிவின் பாலிக்கு முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.