வலைவாசல்:வைணவம்/வைணவ அடியார்/4

அனுமார்

அனுமன் ஒரு இந்துக் கடவுளாக வணங்கப்படுகிறார். வைணவ ஆலயங்களில் இவரது உருவச்சிலையைப் பார்க்கலாம். இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தை வாயு (பஞ்சபூதங்களில் ஒன்று) ஆவர். இராமயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு. அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்ததாக கருதப்படுகிறது.