வல்லபாய் மார்வானியா

இந்திய நாட்டின் விவசாயி


வல்லபாய் வசுரம்பாய் மார்வானியா (Vallabhbhai Vasrambhai Marvaniya) இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்தின் சுனாகத் மாவட்டத்தில் உள்ள கம்த்ரோல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இந்திய விவசாயி ஆவார். குசராத்து மக்களுக்கு கேரட்டைஅறிமுகப்படுத்துவதில் பெயர் பெற்றவர் ஆவார். 2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [1] [2] 2017 ஆம் ஆண்டு, குடியரசு தலைவர் இல்லத்தில் இந்தியக் குடியரசு தலைவரிடமிருந்து தேசிய விருதையும் பெற்றார். [3] தனது கண்டுபிடிப்புக்காக 2017 ஆம் ஆண்டில் ஒன்பதாவது தேசிய கிராசுரூட்சு கண்டுபிடிப்பு விருதுகளைப் பெற்றுள்ளார். [4]

வல்லபாய் வசுரம்பாய் மார்வானியா
பிறப்புசூனாகத் மாவட்டம், குசராத்து
பணிஉழவர்
அறியப்படுவதுகுசராத்து மக்களுக்கு கேரட் அறிமுகப்படுத்தியவர்
விருதுகள்தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா, 2017
தேசிய கிராசுரூட்சு கண்டுபிடிப்பு விருதுகள், 2017
பத்மசிறீ விருது, 2019

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லபாய்_மார்வானியா&oldid=3764858" இலிருந்து மீள்விக்கப்பட்டது