வான்கப்பல்

ஒரு வான்கப்பல் என்பது காற்று விமானத்தை விட இலகுவான' ஒரு வகை விமானம் ஆகும். இதை சுக்கான்களைப் பயன்படுத்தி காற்று மூலம் நடைமுறைக்கு ஏற்ப உயர்த்தி, நகர்த்தி செலுத்த முடியும்.

ஒரு நவீன வான்கப்பல்
காற்று மிதவைகளுடன் ஒப்பிடுகையில் இயக்கத்தக்க வான்கப்பல், 20 ஆம் நூற்றாண்டின் கலைக்களஞ்சியத்தில் இருந்து

வரலாறு தொகு

1782ஆம் ஆண்டு ஜோசப் மைக்கேல் (Joseph Michel), ஜாக்யூஸ் மான்ட்கோல்பியர் (Jacques Montgolfier) என்ற இரண்டு சகோதரர்கள் பிரான்ஸில் ஒரு பெரிய கூண்டுக்குள் சூடான காற்றை நிரப்பி அதைப் பறக்கவிட்டார்கள். அதற்கு பெரிய பந்து என்று பொருள் தருகிற பலூன் (balloon) என்று பெயரிடப்பட்டது. 1852ஆம் ஆண்டில் ஹென்றி கிப்பார்டு[1] என்பவர் ஒரு பெரிய சுருட்டின் வடிவத்திலிருந்த கூட்டின் அடியில் ஒரு நீராவி எஞ்சினைப் பொருத்தினார். கூட்டிற்குள் சூடான வாயுவை நிரப்பிவிட்உ அதை நீராவி எஞ்சினின் உதவியால் விரும்பிய திசையில் செலுத்த முடிந்தது. அதற்கு டிரிஜிபிள் (dirigible) பலூன் என்று பெயரிட்டார்கள். டிரிஜிபிள் என்ற சொல்லுக்கு வழி நடத்தக் கூடியது என்று அர்த்தம். எஞ்சின்கள் மூலம் செலுத்தப்படக் கூடிய எல்லாப் பலூன்களுக்கும் டிரிஜிபிள் என்ற பெயர் வழங்கப்பட்டது.

 
கிராப் ஜெப்பலின்
 
கிராப் ஜெப்பலின்

பெர்டினான்டு ஜெப்பலின் (Ferdinand Von Zeppelin) என்ற ஜெர்மானியப் புதுப் புனைவாளர் உருப்படியான அமைப்புள்ள டிரிஜிபிள்களை முதன்முதலாக உருவாக்கினார். அவர் முதலில் அலுமினியத்தாலான ஒரு பெரிய கூண்டுச் சட்டத்தை அமைத்தார். அதற்குள் ஹைட்ரஜனைச் செலுத்தி உப்ப வைக்கக் கூடிய ஒரு பெரிய பலூன் பொருத்தப்பட்டது. இத்தகைய டிரிஜிபிள்கள் மிகப்பெரியவை. அவை நூற்றுக்கணக்கான பயணிகளையும், பல ஆயிரம் கிலோ கிராம் எடையுள்ள சரக்குகளையும் தூக்கிச் செல்லக் கூடியவை. இத்தகைய டிரிளிபிள்கள் ஜெப்பலின்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றன. கிராப் ஜெப்பலின் (Graf Zeppelin) பல முறை ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் பலமுறை பயணம் செய்தது. டிரிஜிபிளை ஆகாயக் கப்பல் (airship) எனவும் அழைப்பதுண்டு.

மேற்கோள்கள் தொகு

  1. Winter & Degner (1933), p. 36.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்கப்பல்&oldid=3421522" இலிருந்து மீள்விக்கப்பட்டது