விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 19, 2018

தெய்வீகச் சங்கு என அழைக்கப்படும் வெண் சங்கு (Turbinella pyrum) ஒன்றின் ஐந்து காட்சிகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இவை இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணப்படும் சங்கு எனவும் அழைக்கப்படும் கடல் நத்தை இனத்தைச் சேர்ந்தவை. இவை இசைக்கருவியாக இந்து, மற்றும் பௌத்த கோயில் வழிபாட்டின் போது பயன்படுகிறது. வைணவக் கடவுளான விஷ்ணுவின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது. திபெத்தியப் பௌத்தத்தில் இது எட்டு வழிபாட்டு சின்னங்களில் ஒன்றாகாகப் பயன்படுத்தப்படுகிறது.

படம்: எச். செல்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்