விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 29, 2015

நீல மஞ்சள் ஐவண்ணக் கிளி அல்லது நீலமஞ்சள் பெருங்கிளி என்பது கிளிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்காவ் என்னும் பெருங்கிளி வகையைச் சேர்ந்த ஒரு பறவை. இப்பறவைகள் தென்னமெரிக்கக் காடுகளில் காணப்படுகின்றன. இப்பெருங்கிளி 76 முதல் 83 செ.மீ நீளமும் 900 முதல் 1300 கிராம் எடை வரையும் வளரக்கூடியது. இப்பறவை பார்ப்பதற்கு அழகாக நீல இறக்கை, வாலுடனும் கருநீல கன்னமுடனும், உடலின் அடிப்பகுதி பொன்மஞ்சளாகவும் இருக்கும்.

படம்:எச். செல்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்