விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 22, 2010

{{{texttitle}}}

அகாக்கஸ் மலைகளின் பின்னணியில் மேற்கு லிபியாவில் சகாரா பாலைவனத்தின் ஓர் காட்சி. அகாக்கஸ் மலைகளை வண்ணமய மணல் குன்றுகள், இயற்கை வளைவுகள்,பெரும் பள்ளங்கள், தனியே நிற்கும் பாறைகள் என பலவகையான இயற்கைத் தோற்றங்களில் காணலாம். இது கத் நகரத்துக்கு அருகில் உள்ளதுடன், அல்ஜீரிய நாட்டின் எல்லைக்கும் அண்மையிலேயே இருக்கின்றது.இப் பகுதியில் அதிக அளவில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.இப்பகுதி 1985 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இப் பாறை ஓவிங்கள் கிமு 12,000 தொடங்கி கிபி 100 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பதுடன், பண்பாடு மற்றும் இயற்கை மாற்றங்களை வெளிப்படுத்துவனவாகவும் உள்ளன. இவ்வோவியங்களில், ஒட்டகச் சிவிங்கிகள், யானைகள், தீக்கோழிகள், ஒட்டகங்கள், குதிரைகள் போன்ற விலங்குகளுடன் மனிதர்களின் உருவங்களும் காணப்படுகின்றன. இசை, நடனம் முதலிய அன்றாட நிகழ்வுகள் தொடர்பில் மனிதர்கள் ஓவியங்களில் தீட்டப்பட்டுள்ளனர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்