விக்கிப்பீடியா பேச்சு:தோழமை

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

பன்னாட்டு தொழிற்சூழலில் வேலைசெய்பவர்களுக்குப் பெயர் சொல்லி அழைப்பது பழகியிருக்கலாம். சிலர் பெயர் சொல்லி அழைப்பதை மட்டும் விரும்பலாம். ஏனையோருக்கு இதில் விருப்பமா என்பது சிந்திக்கவேண்டிய விசயம். ஒரு புறம் விக்கிப் பட்டறைகள், கூடல்கள் நடத்தி விக்கிப் பயனர்களின் நட்புறவை வளர்க்க முனைவதும், மறுபுறம் மெய்நிகர் வெளிக்கான அடையாளங்களை வளர்ப்பதும் முரணாகத் தெரிகிறது. மரியாதையுடன் கூப்பிடுவது பெரியோரை வியத்தல் ஆகிவிடாது என்பது இச்சிறியோனின் கருத்து. மேலும் இன்சொல் பதங்கள் விக்கி உளைச்சலுக்கு ஒருவகையான மருந்தும் கூட --நீச்சல்காரன் (பேச்சு) 05:57, 10 நவம்பர் 2013 (UTC)Reply

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:32, 10 நவம்பர் 2013 (UTC)Reply
Return to the project page "தோழமை".