விக்கிப்பீடியா பேச்சு:நிருவாகிகள் பணிப்பட்டியல்

@Rsmn, Nan, Kanags, AntanO, Shanmugamp7, and Selvasivagurunathan m: - இப்பட்டியலை உரியவாறு இற்றைப்படுத்தித் தருமாறு வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:16, 17 அக்டோபர் 2016 (UTC)Reply

இதனுடன் தொடர்புபட்ட புதிய பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டியுள்ளது. அவற்றிள் சில கொள்கை சார்ந்தவை. என்ன செய்வது? --AntanO 02:10, 18 அக்டோபர் 2016 (UTC)Reply
உரிய பக்கங்களை உருவாக்குவோம். அனைவரும் இயன்றளவு பங்களிப்போம். அதே வேளை, ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள பல்வேறு வழிகாட்டல்கள், தனிநபர் கருத்தினை முன்வைக்கும் கட்டுரைகள் ஆகியவை ஆங்கில விக்கிப்பீ்டியா வளர்ந்த சூழலுக்குத் தக்கவாறு விரிவாக உள்ளதையும் கவனிக்க வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியாவிலேயே தேவைக்கு மிக அதிகமாக அதிகார வழிமுறைகளும் (bureaucracy) வழிமுறைகளும் விதிகளும் பங்களிப்பாளர்களைச் சோர்வடையச் செய்கின்றன என்ற விமரிசனம் உண்டு. இதனாலேயே அவர்களின் நிருவாக அணுக்க வாக்கெடுப்புப் பொறிமுறையை மறுவரையறை செய்ய, இலகுவாக்க முயன்று வருகிறார்கள். இம்மாறுபட்ட சூழல்களை ஒப்பு நோக்கி தமிழ் விக்கிப்பீடியா சூழலைக் கருதி சுருக்கியோ தவிர்த்தோ எழுதலாம். அடிப்படைக் கொள்கைகள், தகுதிகள், திறன்களில் சமரசம் வேண்டாம். ஆனால், பொறிமுறைகள் இலகுவாக இருத்தல் வேண்டும். --இரவி (பேச்சு) 06:05, 18 அக்டோபர் 2016 (UTC)Reply
Return to the project page "நிருவாகிகள் பணிப்பட்டியல்".