விக்கிப்பீடியா பேச்சு:வலைவாசல்/வலைவாசல் அமைத்தல்

வலைவாசல் தொகு

அன்புடன் விக்கிபீடியர்களுக்கு,

தமிழ் விக்கிபீடியாவில் portal என்ற பெயர்வெளிக்கான தமிழ் சொல்லாக நுழைவாயில் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என அறிகிறேன். அய்யாவழி நுழைவாயிலில், நுழைவாயில்:அய்யாவழி என்றே இருக்கிறது. ஆனால் முகப்பில் சமுதாய வலைவாசல் என்றவாறான மொழி பெயர்ப்பு காணப்படுகிறது. என்னுடைய கருத்துப்படி வலைவாசல் என்பதே சதியானதும், பொருத்தமானதுமான சொல்லாகும். இதனையே நாம் பெயர்வெளிக்கும் பயன்படுத்தலாமே?

--மு.மயூரன் 17:12, 11 ஏப்ரல் 2006 (UTC)

பெரும்பாலான கலைச்சொல் அகராதிகளில் வலைவாசல் என்றுதான் உள்ளது. நுழைவாயில் என்பதும் பொருத்தமில்லாமல் இல்லை. மற்றப் பயனர்களும் இதுபற்றிய தங்கள் கருத்துக்களை முன்வைத்தால் நல்லது. Mayooranathan 17:34, 11 ஏப்ரல் 2006 (UTC)


நுழைவாயில் என்பதை விட வலைவாசல் என்பதை நான் விரும்புவதற்கு காரணம், நுழைவாசல் எனும் போது ஒரு பெரும் வெளிக்கான, வாசல், ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இரு வெளிகளுக்கிடையேயான வாயில் போன்ற கருத்தை தருகிறது. வலைவாசல் என்பது, பெரும் வலையமைப்புக்குள், வலையமைப்போடு வலையமைப்பாக, அதே நேரம் வாசலாகவும் இயங்கும் பக்கம் என்கிற உணர்வை தருகிறது. விக்கி பீடியாவின் வலைவாசலின் பணியும் இதுதான்.. --மு.மயூரன் 17:46, 11 ஏப்ரல் 2006 (UTC)

வலைவாசல் பொருத்தமானதாகவே படுகின்றது. நுழைதல், வாசல் இரண்டும் ஒரே பொருளை நோக்குகின்றன. வலை கூடிய தகவலை தருகின்றது. --Natkeeran 17:53, 11 ஏப்ரல் 2006 (UTC)

I too prefer வலைவாசல் for all the reasons mentioned above--ரவி 18:50, 11 ஏப்ரல் 2006 (UTC)

எடுத்துக்காட்டுக்கள் ?? தொகு

Return to the project page "வலைவாசல்/வலைவாசல் அமைத்தல்".