விக்கிப்பீடியா பேச்சு:விக்கியன்பு/பதிப்பு 2.0

Shrikarsan,

  • பயனர் பெயர், அறிவித்தல்களுக்கு அடுத்து உள்ள இதயத்தைச் சொடுக்கினால் வரும் முதல் இரு இணைப்புகள் (விக்கியன்பு, என் விக்கியன்பு) உடனடியாக உரிய பக்கத்துக்குச் செலவதில்லை. இரு முறை வழி மாற்றி பக்கம் காணவில்லை என்று செய்தி வந்து பிறகே உரிய பக்கத்துக்குச் செல்கிறது. இதனைச் சரி செய்ய முடியுமா?
  • விக்கியன்பு, விக்கியன்பு பதிகை ஆகிய இரண்டு இணைப்புகளும் ஏறத்தாழ ஒரே தகவலைத் தான் தருகின்றன. விக்கியன்புப் பதிகை மட்டும் இருந்தால் போதுமானது.
  • என் விக்கியன்பு பக்கம் வெற்றாக ஏதும் அறிமுகம் இல்லாமல் இருப்பதைத் தவிர்க்கலாம். பகுதிகள் 2, 3 என்று தொடங்குகின்றன. 1, 2 என்று இருக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 07:29, 2 சனவரி 2016 (UTC)Reply
இரவி அவர்களே சிறப்பு பெயர்வெளியில் பக்கங்களை உருவாக்க முடியாது. விக்கியில் இல்லாத சிறப்புப் பக்கங்களுக்குச் சென்றால் (எகா:சிறப்பு:விக்கி) நீங்கள் குறிப்பிட்ட செய்தி தோன்றும். இக்கருவி அச்செய்திகளின் உள்ளடக்கத்தை .load() (இணைப்பு) இன் துணையுடன் மாற்றி உரிய செய்தியை பதிகையில் இருந்து எடுத்துத் தோன்றச்செய்கின்றது. அதனால் தான் வழிமாற்றுவது போலத் தெரிகின்றது. பயனர் பதக்கம் அளிக்கும் போது பதிகை பக்கத்தில் மட்டும் தான் தொகுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. சிறப்பு:Wikilove, சிறப்பு:MyWikilove பக்கங்கள் இங்குள்ள தகவல்களைப் பெற்றுக்கொண்டு தோன்றுகின்றது. //பகுதிகள் 2, 3 என்று தொடங்குகின்றன. 1, 2 என்று இருக்க வேண்டும்.// நீங்கள் கூறவருவது புரியவில்லை.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:07, 2 சனவரி 2016 (UTC)Reply
@Shrikarsan: அசத்தும் புதிய பயனர் பதக்கத்தின் படிமம் அதன் background இன் நிறத்தில் உள்ளது. பதக்கத்தின் படிமம் தெளிவாகத் தெரியவில்லை.-- மாதவன்  ( பேச்சு  ) 11:23, 2 சனவரி 2016 (UTC)Reply
@Maathavan: தற்போது File:Off to a good start barnstar.png இற்குப் பதிலாக படிமம்:Wiki Lei Barnstar Hires.png ஐ இணைத்துள்ளேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 17:23, 2 சனவரி 2016 (UTC)Reply
@Shrikarsan: சூப்பர், பதக்கம் நன்றாக உள்ளது அண்ணா!.-- மாதவன்  ( பேச்சு  ) 04:26, 3 சனவரி 2016 (UTC)Reply


Shrikarsan, இதனைப் பாருங்கள். இந்த இரண்டாம் பதிப்பு முழுக்க நீங்களே உருவாக்கியதா? வேறு விக்கிகளில் இருக்கிறது என்றால் செயற்பாட்டை ஒப்பிட்டுப் பார்க்க உதவும். அவரவருக்கான மணல் தொட்டி இணைப்பு வருவது போல் அவரவருக்கான என் விக்கியன்பு பக்கம் இருக்கலாம். சிறப்பு பெயர் வெளியில் இடத் தேவையில்லை.--இரவி (பேச்சு) 13:55, 3 சனவரி 2016 (UTC)Reply

இரவி அவர்களே இப்பதிப்பு முழுக்க நானே உருவாக்கியது. எனக்கு 2, 3 எனத்தோன்றவில்லை. வேறுயாருக்காவது தோன்றுகின்றதா? சிறப்பு:Wikilove/Shrikarsan பக்கத்திலும் இதே பிரச்சனை உள்ளதா? மணல்தொட்டி போல் இணைப்புத் தரவேண்டுமெனில் ஒவ்வொரு பயனரது விக்கியன்பு உப பக்கத்திலும் தனித்தனியாகத் தொகுக்க வேண்டும். பதிகை பக்கத்தில் மட்டுமே தற்போது தொகுப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இச் சிறப்புப் பக்கங்கள் தரவுகளை பயன்படுத்தித் தோன்றும் பக்கங்கள் மட்டுமே.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:44, 3 சனவரி 2016 (UTC)Reply
Shrikarsan, தனிப்பட்ட முறையில் இதனை உருவாக்கியுள்ளீர்கள் என்பதனை உணரவில்லை. மிரட்டலான உழைப்பு. பாராட்டுகள். எனக்கு ஒரு சோதனைப் பதக்கம் தாருங்கள். அதன் பிறகு என் பக்கம் எப்படி வருகிறது என்று பார்க்கலாம். --இரவி (பேச்சு) 14:59, 3 சனவரி 2016 (UTC)Reply
நான் விருப்பத் தேர்வுகள்->தோற்றம்->மேம்பட்ட விருப்பத்தேர்வுகள் என்பதன் கீழ் தலைப்புகளுக்குத் தானியக்கத் தலைப்பிடு என்று தெரிவு செய்திருந்தேன். அதனால் தான் 2, 3 என்று எண்கள் வந்தன. ஆனால், 1 என்று சுட்டி வர வேண்டிய முதல் தலைப்பைக் காணவில்லை. உங்கள் நிரலைச் சரி பார்க்கவும். இது தனிப்பட்ட முறையில் அமைந்த முயற்சி என்பதால் விக்கிப்பீடியா:நுட்ப மாற்ற வாக்கெடுப்பு பக்கத்தில் முறைப்படி ஆதரவு கோருவது நன்று. தற்போது செயற்பாட்டில் இருப்பது சோதனையோட்டமாக இருக்கட்டும். அதன்பிறகு, விக்கிப்பீடியா:விக்கியன்பு பக்கத்தை உரியவாறு இற்றைப்படுத்துவோம். தற்போது என் விக்கியன்பு இணைப்புக்கு மேல் வரும் விக்கியன்பு இணைப்பை விக்கிப்பீடியா:விக்கியன்பு பக்கத்துக்கு இட்டுச் செல்லலாம். அல்லது, மொத்தமாகவே தூக்கி விடலாம்.--இரவி (பேச்சு) 15:32, 3 சனவரி 2016 (UTC)Reply
இரவி அவர்களே விக்கியில் இல்லாத சிறப்புபக்கத்தை திறக்கும் போது தோன்றும் தலைப்பான அவ்வாறான சிறப்புப் பக்கங்கள் எதுவுமில்லை எற தலைப்பு மறைக்கப்பட்டுள்ளது அதனால் தான் 2,3 எனத் தொடங்குகின்றது. மாற்று வழியை யோசிக்கின்றேன். முதலாவது இணைப்பை விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிப்பு 2.0 பக்கத்திற்குச் செல்லும் படி அமைக்கலாம். ஆயினும் சிறப்பு:Wikilove பக்கம் தொடர்ந்தும் இயங்கும்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:59, 3 சனவரி 2016 (UTC)Reply

புதிய பதக்கங்கள் தொகு

ஆங்கில விக்கிப்பீடியாவில் காணப்படும் பொருத்தமான பதக்கங்களை இங்குள்ள பட்டியலில சேர்க்க உதவி தேவை. அங்குள்ள 2.0 பதக்கங்களைப் பயன்படுத்தலாம். உதவுக - @Shrikarsan and Shriheeran: நன்றி. --இரவி (பேச்சு) 09:32, 26 சூன் 2017 (UTC)Reply

இரவி, அங்குள்ளவற்றில் எவற்றை எனக் குறிப்பிட்டால் மகிழ்ச்சி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:49, 26 சூன் 2017 (UTC)Reply
@Shriheeran: உங்களுக்குத் தெரியாத சட்டம் இல்லை :)இரவி (பேச்சு) 05:20, 27 சூன் 2017 (UTC)Reply

சிக்கல் தொகு

விக்கியன்பு 2.0 வினால் பதக்கம் வழங்கமுடியவில்லை, இணைக்கும் பொழுது பதக்கம் சேர்க்கப்படுகொண்டிருக்கின்றது என்று மட்டுமே வருகின்றது. Shrikarsan, கவனிக்குக.--Maathavan Talk 15:27, 22 அக்டோபர் 2019 (UTC)Reply

Return to the project page "விக்கியன்பு/பதிப்பு 2.0".