விசார்ட்சு அல்லது இசுடாரி (ஆங்கில மொழி: Wizards) என்பவர் ஆங்கில எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு உயர் கனவுருப்புனைவு காதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரம் த காபிட்டு மற்றும் த லோட் ஒவ் த ரிங்ஸ் போன்ற புதின புத்தகங்களில் முக்கிய நபராக தோற்றுவிக்கப்பட்டார். இவர் விசார்ட்சு அல்லது இஸ்டாரி என்றும் அழைக்கப்படுகிறார், இவர்கள் சக்தி வாய்ந்த தேவதை மென்கள் ஆவார். மாயர் மூன்றாம் யுகத்தில் மத்திய-பூமியின் விவகாரங்களில் தலையிட மென்களின் வடிவத்தை எடுத்தனர். இவர் வளருடைய பேரழிவுகளின் வன்முறைகளில் நேரடியாக தலையீயிட்ட பிறகு ஒரு கடவுள் போன்று கருதப்பட்டார்.

விசார்ட்சு
த காபிட்டு, த லோட் ஒவ் த ரிங்ஸ் கதை மாந்தர்

இந்த கதையில் மூன்று விசார்ட்சுகள் உள்ளனர். ஆனால் முக்கியமாக இரண்டு விசார்ட்சுகளை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒன்று காண்டால்ப்பு எனும் விசார்ட் தீய சக்திகளை அழிக்க வழிவகுக்கிறார். அதே வேளை இன்னொரு விசார்ட் சாருமான், இவர் தீய சக்தியான செளரனிற்கு உதவுகிறார். சாருமான் என்பவர் வெள்ளைக் குழுவின் தலைவராகப் புறப்படுகிறார், ஆனால் அதிகாரத்தின் சோதனையின் காரணமாக, இவர் சாரோனின் கொள்கையை பின்பற்றி இருண்ட வழியில் செல்கிறார்.

காண்டால்ப்பு என்பவர் செளரனின் தீய செயல்களை எதிர்க்க, ஒரு மோதிரத்தை அழித்து சௌரோனை தோற்கடிப்பதற்கான தேடலில் இடைவிடாமல் முயற்சிக்கிறார். அதே தருணம் சாருமான் வீழ்ந்து அழிந்ததால் அவர் சாருமானின் இரட்டையை உருவாக்குகிறார், அதே நேரத்தில் காண்டால்ப்பு சாருமனின் இடத்தை வெள்ளை மந்திரவாதியாக ஆக்கிரமித்துள்ளார். அந்த தருணத்தில் காண்டால்ப்புவின் தோற்றம் நோர்ஸ் கடவுளான ஒடினை வாண்டரர் என்ற தோற்றத்தில் ஒத்திருக்கிறார். சில தருணங்களில் அவர் ஒரு தேவதூதர் என்றும், கிறிஸ்துவின் உருவம் என்றும் விவரிக்கப்படுகிறார்.

இந்த விசார்ட்சு என்று பெயரிடப்பட்ட மூவரும் பீட்டர் ஜாக்சன் இயக்கிய த லார்டு ஆப் த ரிங்ஸ் மற்றும் த காபிட்டு திரைப்பட முத்தொகுப்புகளில் தோன்றினர். டோல்கீனின் நாவல்களில் உள்ள விசார்ட்சை விட அவர்கள் உடல் ரீதியாகவும் குறைவான ஆன்மீக ரீதியாகவும் செயல்படுவதாக வர்ணனையாளர்கள் கூறியுள்ளனர், ஆனால் இது நாடகத்தை மேம்படுத்துவதில் பெரும்பாலும் வெற்றிகரமாக உள்ளது.

இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்குக்கும் விதமாக நடிகர் இயன் மெக்கெல்லன்[1] என்பவர் காண்டால்ப்பு என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் 'கிறிஸ்டோபர் லீ'[2] என்பவர் 'கிறிஸ்டோபர் லீ' என்பவர் சாருமான் என்ற கதாபாத்திரத்திலும், நடிகர் 'சில்வஸ்டர் மெக்காய்' என்பவர் ரடகாஸ்ட்டு என்ற கதாபாத்திரத்திலும் த லார்டு ஆப் த ரிங்ஸ் மற்றும் த காபிட்டு போன்ற திரைப்படத் தொடர்களில் நடித்துள்ளார்கள்.

மாயர் தொகு

மத்திய-பூமியின் மந்திரவாதிகள் மாயர்: கடவுளைப் போன்ற வளர்ரைப் போன்ற ஆவிகள், ஆனால் சக்தி குறைவாக இருக்கும். வெளிப்புறமாக மென்களைப் போல தோற்றமளித்தாலும் அதிக உடல் மற்றும் மன ஆற்றலைக் கொண்டிருப்பதால் இவர்கள் எல்வ்ஸால் இசுடாரி ("புத்திசாலிகள்") என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பெரும் சக்தியின் மாயத்தில் வீழ்ந்த இருண்ட இலார்டு சௌரோனை எதிர்கொள்வதற்காகவும், மூன்றாம் யுகத்தில் மத்திய-பூமியின் சுதந்திர மக்களுக்கு உதவுவதற்காகவும் வளரால் அனுப்பப்பட்டனர்.[3]

சான்றுகள் தொகு

  1. Walter, Brian D. (2011). Bogstad, Janice M.; Kaveny, Philip E.. eds. The Grey Pilgrim. McFarland & Company. பக். 194–215. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7864-8473-7. https://books.google.com/books?id=jNjKrXRP0G8C&pg=PA71. 
  2. Christopher Lee (2003). Lord of Misrule: The Autobiography of Christopher Lee. Orion Publishing Group. பக். 274, 337. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7528-5770-1. 
  3. Stanton, Michael N. (2013). "Wizards".. Routledge. 709–710. ISBN 978-0-415-86511-1. 


த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள்  
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசார்ட்&oldid=3503875" இலிருந்து மீள்விக்கப்பட்டது