விசித்திரவீரியன்

விசித்திரவீரியன் மகாபாரதக் கதையில் வரும் சாந்தனு என்ற மன்னனுக்கும் அவரது மனைவி சத்யவதிக்கும் பிறந்த இரண்டாவது மகன் ஆவார். இவரது அண்ணனான சித்ராங்கதன் இவரது தந்தை சாந்தனுவைத் தொடர்ந்து அஸ்தினாபுரத்தின் மன்னர் ஆனார். சித்ராங்கதன் வாரிசு இல்லாமல் இறந்து விட்டதால் அவரைத் தொடர்ந்து விசித்திரவீரியன் மன்னர் ஆனார்.

விசித்திரவீரியன் அரசுப்பொறுப்பேற்ற போது அவர் சிறுவனாகையால், அவரது சார்பாக பீஷ்மர் ஆட்சி செய்து வந்தார். இவருடைய திருமணத்திற்காக காசி மன்னனின் புதல்விகளின் சுயம்வரத்தின் போது பீஷ்மர் அங்கு சென்று சுயம்வரத்தினை வென்று அம்மூன்று இளவரசிகளையும் கொண்டுவந்தார்.

அம்பா வேறு ஒருவருடன் காதல்வயப் பட்டமையால் அம்பிகாவையும் அம்பாலிகாவையும் விசித்திரவீரியனுக்கு மணமுடித்து வைத்தார். ஆனால் மணமான சிறிது காலத்திலேயே அவர் இறந்து விட்டார்,அவரது உடலையும்,அவரின் விந்தணுவையும் பதபடுத்தி வைத்தனர்.

அத்தினாபுரத்துக்கு வாரிசு இல்லாத நிலை ஏற்பட்டதால், விசித்திரவீரியனின் மனைவிகளான அம்பிகா, அம்பாலிகா ஆகியோர் மூலம் வாரிசுகளைப் பெற்றுக்கொடுக்க பீஷ்மரைச் சத்தியவதி ஆலோசனை கேட்டாள். சத்தியவதியின் மற்றொரு மகனான மருத்துவத்தில் புலமையும் தவ வலிமையும் பெற்ற வியாசரின் மூலம் வாரிசுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பீஷ்மர் ஆலோசனை கூறினார். இதன்படி, வியாசரும் அம்பிகா, அம்பாலிகா ஆகியோரிடம் விசித்திரவீரியனின் அணுவை அவர்கள் கர்பபையில் செலுத்தி திருதராட்டிரனும், பாண்டுவும், விதுரரும் பிறக்க செய்தார்.

தலைமுறை அட்டவணை தொகு

பிரதிபன்சுனந்தா
கங்கைசந்தனுசத்தியவதிபராசரர்பாலிகன்தேவாபி
பீஷ்மர்சித்திராங்கதன்விசித்திரவீரியன்வியாசர்சோமதத்தன்
(அம்பிகா மூலம்) (அம்பாலிகா மூலம்)(தாசி மூலம்)
திருதராட்டிரன்பாண்டுவிதுரன்பூரிசிரவஸ்2 மகன்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=விசித்திரவீரியன்&oldid=2670428" இலிருந்து மீள்விக்கப்பட்டது