வினைச்சொல்

ஒரு குறிப்பிட்ட செயலினைக்குறிக்கும் சொல்

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும். எ.கா கண்ணன் ஓடினான் என்ற தொடரில் ஓடினான் வினைச்சொல்லாகும். பழம் மரத்தில் இருந்து வீழ்ந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது வினைச்சொல்லாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும்.

முற்று இருவகைப்படும். அவை

எச்சம் இரண்டு வகைப்படும். அவை

ஒரு வினையானது (செயலானது) முடிவுறாமல் தொக்கி நிற்பது எச்சம். இதனை எச்சவினை என்பர். இத்தகைய எச்சவினையானது பெயரைக்கொண்டு முடிவுற்றால் அது பெயரெச்சம். வினையைக் கொண்டு முடிவுற்றால் அது வினையெச்சம் சான்று: படித்த- இதனோடு பெயரை மட்டுமே சேர்க்க இயலும் படித்து- இதனோடு வினையை மட்டுமே சேர்க்க இயலும் இப் பெயர், வினை எச்சங்கள் 1.தெரிநிலை 2. குறிப்பு என இரண்டாகப் பகுக்கப்படும்

முற்று தொகு

தெரிநிலை வினைமுற்று தொகு

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்

எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள்

குறிப்பு வினைமுற்று தொகு

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.

எ.கா: அவன் பொன்னன்.

எச்சம் தொகு

வினையெச்சம் தொகு

வினையெச்சம் என்பது வினை முற்றினைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.

எ.கா: படித்துத் தேறினான்

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைச்சொல்&oldid=3601770" இலிருந்து மீள்விக்கப்பட்டது